ⓘ Free online encyclopedia. Did you know? page 21



                                               

உகரச்சுட்டு

உகரச்சுட்டு என்பது அ, இ, உ எனப் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் கூறும் மூவகைச் சுட்டுக்களில் ஒன்று. அகரச்சுட்டு பேசுபவருக்குத் தொலைவிலும், இகரச்சுட்டு பேசுபவருக்கு மிக அண்மையிலும் இருப்பதைச் சுட்டுவதற்குப் பயன்படுகின்றன. உகரச்சுட்டு முன்னிலையில ...

                                               

உயிரீற்றுப் புணரியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து இயல்களில் மூன்றாவது இயல் உயிரீற்றுப் புணரியல் ஆகும். இதில் மொத்தம் 53 நூற்பாக்கள் உள்ளன.

                                               

உரியியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் கடைசி இயல் உரியியல் ஆகும். இதில் மொத்தம் 11 நூற்பாக்கள் உள்ளன. இந்த இயலிலுள்ள நூற்பாக்களில் உரிச்சொல்லி்ன் பொதுவிலக்கணம், ஒருகுணந் தழுவிய உரிச்சொற்கள், பலகுணந் தழுவிய உரிச்சொற்கள், ...

                                               

உருபுப் புணரியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து இயல்களில் ஐந்தாவது இயல் உருபுப் புணரியல் ஆகும். இதில் மொத்தம் 18 நூற்பாக்கள் உள்ளன.

                                               

உரைநடைக் கவிதை

உரைநடைக் கவிதை அல்லது வசன கவிதை என்பது, உரைநடைபோல் அமைந்த கவிதை ஆகும். மிகச் சிலரே தமிழில் உரைநடைக் கவிதைகளை எழுதி வருகின்றனர். உரைநடைக் கவிதைகளைப் பலர் கவிதைகளாக ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்நடையில் உரைநடை, பாட்டுநடை என்னும் பிரிவுகள் உண்டு. கவிதை எ ...

                                               

உரைநூல்

நான்கு வகையான உரைநூல் கள் இருந்ததாக முன்னோர் கூறுவர் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பாட்டிடை வைத்த குறிப்பு, பா இன்று எழுந்த கிளவி, பொருளொடு புணராப் பொய்ம்மொழி, பொருளொடு புணர்ந்த நகைமொழி என்பன அவை. உரைவகை நடையே நான்கு என மொழிப உரைநடை நூல்களை ...

                                               

உவமான சங்கிரக நூல்கள்

தொல்காப்பியத்தில் உவம இயல் என ஒரு பகுதி உண்டு. பெண்ணோடு தொடர்புடைய உவமைகளை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தன. இந்த நூல்களை உவமான சங்கிரகம் என வழங்கினர். உவமான சங்கிரக நூல்கள் எனக் கொள்ளத்தக்க இலக்கண நூல்கள் தமிழ ...

                                               

எழுத்தியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் முதலாவது பகுதி எழுத்தியல் ஆகும். இதில் கடவுள் வணக்கம் எனத் தொடங்கி, எழுத்திலக்கணத்தின் 12 கூறுகள் எழுதப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றையும் விளக்கும் நூற்பாக்கள், புறனடை நூற்பா என மொத்த ...

                                               

ஐந்திலக்கணம்

தமிழ் இலக்கணத்தில் ஐந்திலக்கணம் இலக்கணத்தின் ஐந்து பெரும் பிரிவுகளையும் ஒருங்கே குறிக்கும் சொல்லாகும். தொல்காப்பியர் காலத்தில் இயற்றமிழ் மூன்று பெரும் பிரிவுகளாகவே இருந்தது. அவை எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் என்பன. தமிழில் இலக்கியத ...

                                               

ஒற்றுப் பிழைகள்

ஒற்றுப் பிழைகள் என்பவை எழுதும்போது ஏற்படும் சந்திப் பிழைகளே ஆகும். அதாவது வலி மிகும் இடங்களில் மிகாமலும், தேவையற்ற இடங்களில் மிகுந்தும் எழுதப்படுவதாகும். இது உரைநடையில் ஒரு சில நேரங்களில் தேவையற்ற குழப்பங்களை உண்டாக்கும். எனவே பொதுவாகத் தமிழில் ஒ ...

                                               

கண் (இடப்பெயர்)

கண் என்னும் சொல் பின்னொட்டாக வருவதோடு மட்டுமன்றி, முதலில் நின்று இடம் ஒன்றை உணர்த்தும் சொல்லாகவும் வரும். கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க முன நின்று பின் நோக்காச் சொல். இந்தத் திருக்குறள் கண் என்னும் சொல்லை இரண்டு வகையான ஆகுபெயர் பொருளில் ...

                                               

கண் (பின்னொட்டு)

கண் என்னும் சொல் சொல்லின் பின்-ஒட்டாக அமைந்து முன்னொட்டின் இருப்பிடமாய் வெவ்வேறு பொருள்களை உணர்த்துகின்றன. உறுகண் என்பது பிறரைத் துன்புறுத்துதல் இன்கண் என்பது இன்பம். இது உடலின்பம். தறுகண் என்பது படைமுகத்து அஞ்சாமை புன்கண் என்பது துன்பம். இது உடல ...

                                               

கலவை வாக்கியம்

கலவை வாக்கியம் என்பது முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும். எடுத்துக் காட்டுகள்: "தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று; அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் ...

                                               

கேள்வி

ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற்பொருட்டு வினாவப்படும் வினா ஏவல் வினாவாகும். ஆசிரியர் மாணவனிடம்" இப்பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா?” என்று வினாவுதல் ஏவல் வினா ஆகும். மாணவன் மனப்பாடம் செய்யவில்லை என்று கூறினால் அவனை மனப்பாடம் செய்யும்படி ஏவவும், மனப் ...

                                               

கொளு

பண்டைய நூல்களில், பாடல் கொண்டிருக்கும் கருத்தைப் பாடலின் முடிவில் தொகுப்பாசிரியர்கள் அல்லது உரையாசிரியர்கள் குறிப்பிடும் பகுதியைக் கொளு என்பது வழக்கம். கொளு என்பது கொண்டிருக்கும் செய்தி என விளங்கிக்கொள்ள வேண்டும். கொளுக்குறிப்பு எனவும் இதனைக் குற ...

                                               

சிலப்பதிகாரம், பாவமைதி

                                               

சிலேடை

ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை எனப்படும். மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று. செய்யுள்களிலும், உரை நடையிலும், மேடைப் பேச்சுக்களிலும், சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண ...

                                               

சிறப்புப் பாயிர இலக்கணம்

சிறப்புப் பாயிர இலக்கணம் என்பது பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் ஒரு பகுதி. இப்பகுதியில் ஒரு நூலுக்கு அத்தியாவசியமான சிறப்புப் பாயிரத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் 9 நூற்பாக்களில் சிறப்புப் பாயிரத்தின் இலக்கணமா ...

                                               

சிறப்புப் பாயிரம்

சிறப்புப் பாயிரம் என்பது, ஒரு குறிப்பிட்ட நூலுக்கு மட்டும் சிறப்பாகப் பொருந்தும் விடயங்களை உள்ளடக்கிய ஒரு பாயிர வகை ஆகும். இது முகவுரை அல்லது அணிந்துரை போன்றது. இது அக்குறிப்பிட்ட நூலுக்கு முன்னர் காணப்படும். எல்லா நூல்களுக்கும் பொருந்தக்கூடியதாக ...

                                               

செய்யுள் விகாரம்

விகாரம் என்பது இயல்பு மாற்றம். செய்யுளில் எதுகை,மோனைகளுக்காகச் சில சொற்கன் தன் இயல்பு மாற்றத்தோடு கையாளப்படும். ஓசை ஒத்திசைவுக்காக இவை இவ்வாறு வருகின்றன. வலித்தல் விகாரம் குறுந்தாட் பூதம் குறுந்தாள் என்பதில் உள்ள தொக்குநின்றது அதாவது மறைந்து நின்றது

                                               

சொல் (அமைதி)

தமிழில் சொல் அமையும் பாங்கு சொல்லமைதி எனப்படுகிறது. பொருள் தரும்படி சொல்லப்படுவன அனைத்தும் சொல் எனப்படும். சொல்லில் பெயர், வினை, இடை, உரி என்னும் பாகுபாடுகள் உண்டு. மேலும் திசைச்சொல், வடசொல் என்று சொல் வழங்கும் இடம் நோக்கிய பாகுபாடுகளும் உண்டு. இ ...

                                               

தமிழ் இலக்கண விரிவு

3 பிரிவு எழுத்து, சொல், பொருள் இயல்தமிழ் இலக்கணத்தில் எழுத்து. சொல் ஆகிய இரண்டும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுவன. பொருள் இலக்கணம் தமிழரின் வாழ்வியல் பாங்கைக் கூறுவது. அத்துடன் தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்னும் செய்தியையும் கூறுகின்றன. ...

                                               

தமிழ் இலக்கணத் தொடர்கள் (பொருள்)

தமிழில் மொழி இலக்கணமானது எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் என்னும் இரு பாகுபாடுளில் சொல்லப்படுகிறது. தமிழில் வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் பொருள்-இலக்கணம் என்னும் பகுதியும் உண்டு. இது பிற மொழிகளில் வரையறுக்கப்படாத ஒருவகை இலக்கணம். இதில் அகம், புறம் ...

                                               

தமிழ் இலக்கணத் தொடர்கள் (மொழி)

தமிழ் இலக்கணத் தொடர்கள் என்னும் இக் கட்டுரையில் பண்டைய தமிழ் இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரண்டு நூல்களில் எழுத்து, சொல் என்னும் பகுதியில் உள்ள மொழித்தொடர்கள் மட்டும் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. தொடர் விளக்க நூற்பாவும், ஆங் ...

                                               

தமிழ் இலக்கணம் தலைப்புகள் பட்டியல்

உயிர் எழுத்துக்கள் குறில் நெடில் மெய் எழுத்துக்கள் மெல்லினம் இடையினம் வல்லினம் ஆயுத எழுத்து உயிர்மெய் எழுத்துகள் மாத்திரை மகரக்குறுக்கம் ஐகாரக் குறுக்கம் ஒற்றளபெடை குற்றியலுகரம் ஔகாரக் குறுக்கம் உயிரளபெடை குற்றியலிகரம் ஆய்தக்குறுக்கம்

                                               

தமிழ்நடை

தமிழ்நடை என்பது தமிழ் பேசப்படும் முறைமை. இதனை இயல் தமிழ் என்கிறோம். தொல்காப்பியத்தில் உள்ள கிளவியாக்கம் இதனை விரிவாகக் குறிப்பிடுகிறது. ஆங்கிலத்தில் இதனை sequence of sentence என்று கூறுவர். இயல்பாக எழுவாய் + பயனிலை, எழுவாய் + செயப்படுபொருள் + பயன ...

                                               

தமிழில் உள்ள ஒற்றை எழுத்துச் சொற்கள்

ஓரெழுத்தொருமொழி என்றால் ஒற்றை எழுத்துச் சொற்கள் என்று பொருள். அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள். எடுத்துக்காட்டாகத் தீ என்பது வெறும் எழுத்தாக மட்டுமில்லாமல் நெருப்பு என்னும் பொருளைத் தரும் சொல்லாகவும் பயன்படுகிறது. எனவே தீ என்பது ஒரு ஓரெழுத்தொருமொழி.

                                               

தமிழில் சிற்றிலக்கியங்கள்

தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது. சிற்றிலக்கியம் அளவில் பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை சுருங்கியதாக அமைவது. அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். கோவை போன ...

                                               

தொடர்மொழி - மகரம் மயங்காதவை

தொல்காப்பியர் சொற்களை மொழிநிலையில் மூன்றாகப் பகுத்துக்காட்டுகிறார். ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி என்பன அந்த 3 பாகுபாடுகள். தொடர்மொழி என்பது இரண்டு மாத்திரைகளுக்கு மேல் ஒலிக்கும் சொல். தொல்காப்பியர் னகரத்தில் ம ...

                                               

தொல்காப்பியமும், பாணினீயமும்

தமிழிலக்கணத்தை வடமொழி வழித்தாகக் காட்டல் வேண்டி, நடுநிலை திறம்பிய வரலாற்றாசிரியரும், பிராமணத் தமிழ்ப் புலவரும் தொல்காப்பியத்தைப் பாணினீயத் திற்குப் பிற்பட்டதாகக் காட்டுவதுண்டு. காலம்:பாணினியின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டென்று வரலாற்று நூலாசிரிய ...

                                               

அணிந்துரை

அணிந்துரை என்பது, ஒரு நூலை அல்லது வேறு இலக்கிய ஆக்கங்களை அறிமுகப்படுத்தி ஆக்குனர் அல்லாத இன்னொருவர் கொடுக்கும் அறிமுகம் ஆகும். அணிந்துரை கொடுப்பவர் குறித்த ஆக்கம் தொடர்பான துறையில் அறிவும் அனுபவமும் பெற்றவராயும், அத்துறை சார்ந்தோரிடையே மதிப்புப் ...

                                               

ஆசிரியர் ஆகாதவர் இலக்கணம்

ஆசிரியராகாதார் இலக்கணம் என்று நன்னூல் ஆசிரியர் எனக்கொள்ளக் கூடாதவர்களை அடையாளம் காட்டுகிறது. நல்லாசிரியராகக் கருதுவதற்கு நன்னூல் கூறிய நற்பண்புகள் இல்லாதவர் அனைவரும் நல்லாசிரியராகார். தான் கற்றவற்றை உள்ளபடியே பாடம் சொல்லும் குணம் இல்லாதவரும், பொய ...

                                               

ஆசிரியரை வழிபடும் முறை

மாணவர்கள் ஆசிரியரை வழிபடும் முறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை நன்னூல் கூறுகிறது. குளிர் காய்பவர் நெருப்புக்கு அஞ்சி அதைவிட்டு அகலாமலும் மிக நெருங்காமலும் அமர்ந்து குளிர் காய்வர். அதுபோல, மாணவனும் ஆசிரியருக்கு அஞ்சி அவரை அகலாமலும் மிகநெருங்காமலும ...

                                               

உத்தி (இலக்கியம்)

உத்தி என்பதன் விளக்கம் என்னவென்று நன்னூல் விளக்குகிறது. ஒரு நூலால் அறிவிக்கப்படும் பொருளை உலக வழக்கு, நூல் வழக்கு ஆகிய வழக்குகளோடு பொருத்திக் காட்டவேண்டும். அப்பொருளை மற்ற நூல்களிலும் ஏற்ற இடமறிந்து இவ்விடத்திற்கு இப்படி எனத் தக்கபடி பொருத்திக் க ...

                                               

உரை இலக்கணம்

உரை இலக்கணம் என்பது சூத்திரம் எனப்படும் நூற்பா அல்லது செய்யுள் அல்லது பாடலுக்கு உரை எழுதும்போது அவ்வுரை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கான இலக்கணமாகும். மூல பாடம், கருத்துரை, சொற்களைப் பிரித்துக்காட்டுதல், அச்சொற்களுக்குரிய பொருள் தருதல், தொகுத்துப் ...

                                               

எழுத்தின் வகை

நன்னூல் எழுத்தின் வகை எனக்குறிப்பிடுவது எழுத்திலக்கணத்தின் முதலாவது கூறாகும். சொல்லுக்கு முதல் அடிப்படையாக விளங்கும் அணுக்கூட்டங்களின் மூலமாக இருக்கும் ஒலியே எழுத்தாகும். அவ்வெழுத்து முதலெழுத்து என்றும் சார்பெழுத்து என்றும் இரு வகைப்படும்.:

                                               

எழுத்துகள் வரிசை முறை

தமிழ் எழுத்துகளை எந்த வரிசைமுறையில் அமைப்பது என்பதை நன்னூல் விளக்கும் பகுதி எழுத்துகள் வரிசை முறை எனப்படுகிறது. உயிர் எழுத்துகள் அவற்றின் சிறப்பு கருதியும் ஒன்றற்கொன்று இனமாதல் கருதியும் எழுத்துகளை அகரம் தொடங்கி னகரம் வரை என வரிசைப்படுத்திக் கூறு ...

                                               

எழுமதம்

எழுமதம் என்பது ஒரு நூலுக்கு இருக்கவேண்டிய ஏழு கொள்கைகள் என்று நன்னூல் குறிப்பிடுகிறது. பிறருடைய நூலிலுள்ள குற்றம் காட்டுதல் தான் ஒரு கொள்கையைக் கூறி இறுதிவரை அதை நிலைநாட்டுதல் இருவர் மாறுபடக்கூறிய கொள்கைகளில் ஏதேனுமொன்றை துணிந்து ஏற்றல் பிறர் கொள ...

                                               

கழற்குடத்தின் இயல்பு

கழற்குடத்தின் இயல்பு என்பது கற்பித்தல் செய்யும் ஆசிரியனுக்கு கழற்பெய் குடத்தின் இயல்பு இருக்கக்கூடாது என்பதைக் கூறும் நன்னூல் விளக்கமாகும். வழவழப்பான கழற்சிக்காய்கள் குடத்திற்குள் இடப்பட்டதும் முன்னும் பின்னுமாக அவை குடத்திற்குள் நிரம்பிவிடும். ப ...

                                               

காண்டிகை உரை

காண்டிகை உரை என்பது சூத்திரம் எனப்படும் நூற்பாவிற்கு உரை எழுதும்போது அவ்வுரை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கான இலக்கணமாகும். கருத்துரை, பதவுரை, தேவையான எடுத்துக்காட்டுகள் கொடுத்தல், இடையிடையே வினாவை எழுப்பி அதற்கான விடையையும் உடன் சேர்த்து நூற்பாவி ...

                                               

சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியவர்கள்

ஒரு நூலுக்கு சிறப்புப் பாயிரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என நன்னூலில் குறிப்பிடப்படுவோர்: ”நூலை எழுதிய ஆசிரியனின் ஆசிரியர், நூலாசிரியனுடன் உடன் கல்வி பயின்றவர், நூலாசிரியனின் மாணவர், நூலாசிரியனின் நூலுக்கு உரை எழுதியவர் என்று சொல்லப்பட்ட இந்நால ...

                                               

சிறப்புப்பாயிரம் பிறர்செய்யக் காரணம்

ஒரு நூலின் சிறப்புப் பாயிரத்தை அந்நூலாசிரியரல்லாத வேறொருவர் செய்யவேண்டியதன் காரணமாக நன்னூல் தரும் விளக்கம்: ”இதுவரை வெளிப்படாமல் இருந்த சிறந்த நுட்பங்கள் எல்லாம் விளங்குமாறு, பல்துறை அறிவோடு சிந்தித்து, விரிவாக ஒரு நூலை எழுதினாலும் அதை எழுதியவன் ...

                                               

சிறப்புப்பாயிரம் பொதுவிதி

ஒரு நூலின் சிறப்புப் பாயிரம் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு நன்னூல் காட்டும் பொதுவிதி: ”நூல் இயற்றிய ஆசிரியனுடைய பெயர், எந்த நூலின் அடிப்படையில் இந்த நூல் வந்தது, நூல் வழங்கும் நிலத்தின் எல்லை, நூலின் பெயர், நூலின் இயைபு, நூல் சொல்லும் பொருள், நூ ...

                                               

சூத்திர நிலை

சூத்திர நிலை என்பதனை விளக்க நன்னூல் சில உதாரணங்களைத் தருகிறது. அவை, ஆற்றில் தண்ணீர் இடையறாது தொடர்ந்து ஓடுவது போல மேற்கூறிய சூத்திரங்களையும் சொல்ல வேண்டிய கருத்துக்களையும் தொடர்பு விட்டுப்போகாமல் தொடர்ச்சியாக ஒன்றையடுத்து ஒன்றென நீரோட்டம் போலச் ச ...

                                               

சூத்திர வகை

சூத்திர வகை என்பது சூத்திரங்களின் ஆறு வகைகள் யாவை என்பதை விளக்கும் நன்னூல் நூற்பாவாகும். பல திறப்பொருள்களையும் உள்ளடக்கிப் பொதுவாக அமையும் பிண்டச் சூத்திரம், அவ்வாறு பொதுவாகக் கூறப்பட்ட பல திறப் பொருள்களையும் தொகுத்துக் கூறும் தொகைச் சூத்திரம், த ...

                                               

சூத்திரம் என்பதன் விளக்கம்

சூத்திரம் என்பது, மிகப்பெரிய கருத்தையும் சிலசொற்களில் சுருக்கமாக விளக்குவது சூத்திரம் என நன்னூல் விளக்கம் கூறுகின்றது. சிறிய கண்ணாடி மிகப்பெரிய உருவத்தையும் தன்னுள் வாங்கி தெளிவாக நமக்கு காட்டுவது போல சில எழுத்துக்களால் மிகப்பெரிய கருத்துகளையும் ...

                                               

நல்லாசிரியர் இலக்கணம்

நல்லாசிரியர் இலக்கணம் என்பது ஒரு நூல் இயற்றும் ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய நற்குணங்கள் எவையென்று நன்னூல் வரையறை செய்துள்ள பட்டியலாகும். குடிப்பிறப்பு, அருளுடைமை, கடவுள் பத்தி ஆகிய மேன்மைகளும் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த அறிவும், தாம் கற்றவற்றை ப ...

                                               

நன்னூல்

நன்னூல், தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கா ...

                                               

நன்னூற்காண்டிகையுரை (கூழங்கைத் தம்பிரான்)

நன்னூற்காண்டிகையுரை என்பது கூழங்கைத் தம்பிரான் ஆல் 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலுக்கான உரை ஆகும். நீண்டகாலமாக கிடைக்காமல் இருந்த இந்த நூல் 1980 காலப்பகுதியில் பிரித்தானிய நூலகத்தில் கையெழுத்துப் பிரதியாக பேராசிரியர் அ. தாமோதரன் அவர்களால் கண ...

                                               

நிலத்தின் மாண்பு

நிலத்தின் மாண்பு என்று நன்னூல் நிலத்தின் நற்பண்புகளைக் கூறி அவையாவும் ஒரு நல்ல ஆசிரியருக்கும் இருக்க வேண்டும் என்கிறது. பிறரால் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மிகவிரிந்த உருவப்பரப்பும், வலிமையும், பொறுமையும், தக்க பருவத்தில் மேற்கொள் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →