ⓘ Free online encyclopedia. Did you know? page 22



                                               

பாயிர வகை

பாயிர வகை இரண்டு என நன்னூல் கூறுகிறது. ” பாயிரம் பொதுசிறப் பெனவிரு பாற்றே" - நன்னூல் - 2 அவை பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் என்பவைகளாகும். பொதுப்பாயிரம் என்பது எல்லா நூல்களுக்கும் பொதுவானதாக இருக்கும். சிறப்புப்பாயிரம் எனப்படுவது ஒரு தனிப்பட்ட ...

                                               

பாயிரத்தின் இன்றியமையாமை

ஒரு நூலுக்கு பாயிரம் என்பது எவ்வளவு அவசியமானது என்பதை நன்னூலானது பாயிரத்தின் இன்றியமையாமை யில் விளக்குகிறது. நன்னூலின் பாயிரவியலில் சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் கூறும் நூற்பாக்களில் பாயிரத்தின் இன்றியாமை குறித்து கூறப்பட்டுள்ளது. நன்னூல் கூறுவத ...

                                               

பெயர் (இலக்கணம்)

எழுத்திலக்கணத்தின் கூறுகளாக எழுத்தியலில் கூறப்பட்டுள்ள பெயருக்கு, நன்னூல் இலக்கணம் வகுத்துள்ளது. இடுகுறிப்பெயர், காரணப்பெயர் ஆகிய இரண்டும் பொதுப்பெயராகவும் சிறப்புப்பெயராகவும் வரும். இவ்விரு பெயர்களும் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் என்று மேலும் இரு ...

                                               

போலி

போலி என்பது ஓர் எழுத்து நிற்க வேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து நின்று அதைப் போலப் பொருள் தரும் சொல் ஆகும். சொற்களில் எழுத்துகள் நிற்கும் இடங்களைப் பொருத்து, முதல் போலி, இடைப்போலி, மொழி இறுதிப் போலி அல்லது கடைப்போலி என்று எழுத்துப் போலியை நன்னூல் ம ...

                                               

மடற்பனையின் இயல்பு

மடற்பனையின் இயல்பு என்பது கூரிய கருக்கு மடல்களையுடைய பனை மரத்தின் இயல்பு ஓர் நல்லாசிரியனுக்கு இருக்கக்கூடாது என்ற கருத்தைக் கூறும் நன்னூல் வரியாகும். கூர்மையான கருக்கு மடல்களுடைய பனைமரமானது தானே தன்னிடம் உள்ள பழங்களையும் காய்களையும் உதிர்த்தால்தா ...

                                               

மலரின் மாண்பு

மலரின் மாண்பு அனைத்தும் பெற்றிருக்கும் ஆசிரியரே நல்லாசிரியர் என்று நன்னூல் விளக்கிக் கூறுகிறது. மங்கலப் பொருளாகவும் எச்செயலையும் அலங்கரிப்பதற்கு மிக இன்றியமையாததாகவும், மகிழ்ந்து எல்லோரும் மேலே சூட்டிக் கொள்ளக்கூடியதாகவும் மென்மைத் தன்மையுடையதாகவ ...

                                               

மலையின் மாண்பு

மலையின் மாண்பு என்று நன்னூல் மலைக்குரிய பண்புகளைக் குறிப்பிட்டு அப்பண்புகள் ஓர் ஆசிரியருக்கும் இருந்தால் தான் அவர் நல்லாசிரியர் என்ப்படுவார் என்கிறது. அளந்து அறிய முடியாத அளவுக்கு வடிவத்தால் விரிந்தும், எண்ணிக்கையில் அடங்காத அளவுக்குப் பொருள்களைத ...

                                               

மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம்

மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம் என்று மாணாக்கர் ஆவதற்குத் தகுதியில்லாதவர்களை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. கள்ளுண்டு களிப்பவன், சோம்பல் உடையவன், தன்னைத் தானே பெருமை பேசிக்கொள்பவன், காமுகன், கள்வன், நோயாளி, அறிவில் ஏழையானவன், குணம் மாறுபடப் பேசுப ...

                                               

மாணாக்கர் இலக்கணம்

மாணாக்கர் இலக்கணம் என்று நன்னூலில் எவரெல்லாம் பாடம் கேட்பதற்குரிய மாணாக்கர் ஆவர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. தன்மகன், தன்னுடைய ஆசிரியருடைய மகன், நாட்டையாளும் அரசனுடைய மகன், பொருளை மிகுதியாக வாரிவழங்குபவன், தன்னை வணங்கி வழிபடுபவன், சொல்லும் பொருள ...

                                               

முடத்தெங்கின் தன்மை

முடத்தெங்கின் தன்மை என்பது நன்னூல் சுட்டிக்காட்டும் ஆசிரியராகாதவர் இயல்புகளில் ஒன்று ஆகும். வேலிக்கு அப்பால் வளைந்த தென்னைமரம் தனக்கு நீர் ஊற்றி போற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்களுக்குப் பயன்தராமல் மற்றவர்களுக்குப் பயந்தருகின்ற இயல்பு கொண்டதாகும். ...

                                               

முதல் நிலை

முதல் நிலை என்பது மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துகள் எவையெவை எனக் கூறும் நன்னூலின் எழுத்தியலின் பகுதியாகும். பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங என்னும் பத்து உயிர் ஏறிய மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.

                                               

முதல் நூல்

தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பார்த்தனர். நூலாசிரியர் தாமே ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கூறும் நூல் முதல்நூல். முதல்நூலைப் பின்பற்றித் தன் கருத்துகளையும் இணைத்து எழுதப்படும் நூல் வழிநூல். முதல்நூல் முதல்ந ...

                                               

முப்பத்திரண்டு உத்திகள்

முப்பத்திரண்டு உத்திகள் நூலில் இருத்தல் வேண்டும் என நன்னூல் சிலவகை உத்திகளைப் பட்டியலிட்டுள்ளது. அவை, 1.சொல்லித் தொடங்குதல் வேண்டும். 2. காரண காரிய முறைப்படி இயல்களை வைத்தல் வேண்டும். 3. நூலில் கூறக்கருதும் பொருள்களை தொகுத்துக் கூறுதல் வேண்டும். ...

                                               

முழுப்புலமை பெறும் முறை

முழுப்புலமை பெறும் முறை என்பது யாதெனில், மாணவர்கள் தாம் கற்கும் பாடத்தில் முழுப்புலமை பெறுவது எப்படியென நன்னூல் காட்டும் வழிமுறையாகும். ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைக் கேட்கும் ஒரு மாணவனுக்குக் காற்பங்கு அறிவே நிரம்பும். அதே மாணவன் தம்முடன் கல்வி ...

                                               

மூவகை நூல்கள்

                                               

மூவகை மாணாக்கர்

அன்னப்பறவையையும் பசுவையும் போன்றவர்கள் தலை மாணாக்கர். பாலையும் நீரையும் கலந்து வைத்தால் நீரைப்பிரித்து பாலைமட்டும் பருகும் இயல்புடையது அன்னம். அதுபோல ஆசிரியர் கூறுபவற்றுள் நல்லதை எடுத்துக்கொண்டு அல்லதைத் தள்ளி விடும் மாணவர்கள் தலை மாணவர்கள் எனப்ப ...

                                               

வழிநூல்

தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இலக்கண நூல்கள் வகைப்படுத்திப் பார்க்கின்றன. தொல்காப்பியப் பார்வை தொல்காப்பியம் நூல்களை முதல்நூல், வழிநூல் என இரண்டாக வகைப்படுத்துகிறது. வழிநூல் முதல்நூலின் வழியே தோன்றும் நூல் என்கிறது. ...

                                               

விருத்தி உரை

விருத்தி உரை என்பது சூத்திரம் எனப்படும் நூற்பாவிற்கு எழுதப்பட்ட காண்டிகை உரையின் தொடர்ச்சியாக அமையும் கூடுதல் இலக்கணமாகும். காண்டிகை உரையில் கூறிய நூற்பாவின் உட்பொருள் விளக்கத்தோடு மட்டும் அல்லாமல் அவ்விடத்திற்கு இன்றியமையாதனவாகக் கருதப்படும் அனை ...

                                               

நாற்கவி

நாற்கவி என்பது பாடப்படும் முறைமையால் நான்கு வகைப்படும் கவிதைகள். பகழிக்கூத்தர் இவற்றை முருகன் தனக்குத் தந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்த நான்கு வகையிலும் பாடவல்ல கவிஞரை இவர் ‘பெரும்பனுவர்’ என்று குறிப்பிடுகிறார். பனுவல் என்னும் சொல் நூலைக் குறிக்க ...

                                               

நூலினது வரலாறு

நூலினது வரலாறு என்பது பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் காணப்படும் பொதுப் பாயிரத்தின் உறுப்புகளில் ஒன்றாகும். இதில் 22 நூற்பாக்களில் நூலுக்கான கீழ்க்காணும் விவரங்கள் தரப்பட்டுள்ளன: முதல்நூல் சார்புநூல் உரை இலக்கணம் வழிநூலுக்கும் சார்புநூலுக்கும் உ ...

                                               

பண்புப்பெயர் மாற்றங்கள்

தமிழ் இலக்கணம் பெயர்ச்சொல்லை ஆறு வகையாகப் பகுத்துப் பார்க்கிறது. அவை பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பன. தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கண நூல்கள் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. நன்னூல் பண்புப் பெயர்கள் சிலவற்றைத் தொகுத்துச் சுட்டி ...

                                               

பதவியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் இரண்டாவதாக அமைவது பதவியல் ஆகும். இதில் பதம், பகுதி, விகுதி, இடைநிலை, வடமொழியாக்கம் என்ற ஐந்து கூறுகளின் கீழ் மொத்தம் 23 நூற்பாக்கள் தரப்பட்டுள்ளன. பதம் -6 நூற்பாக்கள் நூற்பா 128- ...

                                               

பதிகம்

நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது. இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார ...

                                               

பாட்டியல்

பாட்டியல் என்பது, பிரபந்த இலக்கியங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தைக் குறிக்கும். பிரபந்தங்களின் வகை, அவற்றின் இலக்கணங்கள், அவற்றைப் பாடவேண்டிய முறை, வெவ்வேறு வருணத்தாருக்குரிய பாடல்கள், அவ்வருணத்தார் இயல்புகள், பாட்டுடைத்தலைவர ...

                                               

பாப்பாவினம்

பாப்பாவினம் ஒரு பாட்டியல் இலக்கண நூல். இது பாக்களையும் பாவினங்களையும் பற்றிக் கூறுகிறது. இதனாலேயே இதற்குப் பாப்பாவினம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதற்கு மாறன் பாப்பாவினம் என்ற பெயரும் வழங்குகிறது. மாறனலங்காரம், மாறன் அகப்பொருள் ஆகிய நூல்களை இயற்றிய ...

                                               

பாயிரம்

தமிழ் இலக்கியத்தில் பாயிரம் என்பது பழங்காலத் தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போல் அமையும் பகுதி ஆகும். இது பாடலாக அமைந்திருப்பதே வழக்கு. பாயிரம் என்பதற்கு வரலாறு என்பது பொருள். நூலில் பாயும் ப ...

                                               

பால்பகா அஃறிணைப் பெயர்கள்

பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்பது ஓர் இலக்கணக் குறியீடு. தமிழில் உள்ள பெயர்ச்சொற்களை உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள் எனப் பகுத்துக் காண்பது மரபு. அவற்றில் அஃறிணையில் ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டு வகை உண்டு. ஒன்றன் பால், பலவின் பால் என்னு ...

                                               

பிறவினை (இலக்கணம்)

பிறவினை என்பது தான் செய்யாமல் பிறர் அல்லது பிறவற்றின் துணையுடன் செய்யும் வினை வடிவம். எடுத்துக்காட்டாக செய் என்பது வினை. செய்வி என்பது பிறரால் செய்வதைக் குறிக்கும் வினை. பிறவினை விகுதிகளாக எட்டு இகர உகர உயிர்மெய் எழுத்துக்கள் பயன்படுகின்றன. அவையா ...

                                               

பெயரியல் (நன்னூல்)

                                               

பொதுப் பாயிரம்

பொதுப் பாயிரம் என்பது நூலாசிரியர் தாம் கூறப்போகும் கருத்துக்களை முன்னுரையாக முதலில் கூறும் பகுதி. இது ஒரு நூலின் முன்னர் சிறப்புப் பாயிரத்துக்கு அடுத்து இடம்பெறும் ஒரு உறுப்பு ஆகும். இது நூலுக்கு ஒரு முகவுரை போன்றது எனினும், இது குறிப்பிட்ட நூலைப ...

                                               

பொதுவியல் (நன்னூல்)

கீழுள்ள தலைப்புகளில் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது: அன்மொழித்தொகை பொதுவியல் உம்மைத்தொகை உவமத்தொகை வேற்றுமைத் தொகை தொகைநிலைத்தொடர்மொழி வினைத்தொகை பண்புத்தொகை வழாநிலை, வழுவமைதி தொகாநிலைத் தொடர்மொழி பொருள்கோள்

                                               

பொருட்புணர்ச்சி

தொல்காப்பியம் புணர்ச்சியைச் சொற்புணர்ச்சி என்றும் பொருட்புணர்ச்சி என்றும் பாகுபடுத்திக் காட்டுகிறது. சொல்லில் உயர்திணை, அஃறிணைப் பாகுபாடுகள் சொல்லின் ஒலி நோக்கியவை அல்ல. சொல்லின் பொருள் நோக்கியவை. மற்றும் சில பொருள்நோக்குப் புணர்ச்சிகளையும் தொல்க ...

                                               

பொருள் மயக்கம்

பொருள் மயக்கம் என்பது பொருள் புரிதலில் ஏற்படும் மயக்கமே பொருள் மயக்கம் ஆகும். ஒரே தொடரில் இரண்டு பொருள்கள் நிலை பெறுவதைக் காண முடிகிறது. அவ்வாறு வருஞ்சூழலில் பொருள் புரிதலில் சில நேரங்களில் இடர் ஏற்படுவதுண்டு. இவ்வாறாக பொருள் புரிதலில் ஏற்படும் ம ...

                                               

பொருள்கோள்

தமிழில் வாக்கியங்கள் அமையும் பாங்கைக் கூறுவது சொல்லதிகாரம். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் முதல் 7 இயல்களில் வழக்குத்தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும், 8 & 9ஆம் இயல்களில் செய்யுள்-தமிழில் வரும் வாக்கிய அமைதி பற்றியும் இலக்கணம் என்னும் புலச் ச ...

                                               

மகடூஉ முன்னிலை (இலக்கணம்)

தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில், மகடூஉ முன்னிலை என்பது, எதிரில் உள்ள பெண்ணொருத்திக்குச் சொல்வதுபோல் பாடல்களை எழுதும் ஒரு முறையைக் குறிக்கும். மகடூஉ என்பது பெண்ணைக் குறிக்கும் ஒரு சொல். முன்னிலை என்பது முன்னே இருப்பதாகக் கருதுவதைக் குறிக்கிறது. சமண ...

                                               

மகர னகர மயக்கம்

எழுத்தாக மாறும். எடுத்துக்காட்டு அற ம் பா ர்க்கும் ஆற்றின் நுழைந்து அற ன் வ ரையான் வரையான் என்னும் சொல்லிலுள்ள அரையுயிர் அற ன் அ ழீஇ அல்லவை செய்தல் தமிழில் இப்படி மயங்காத அஃறிணைச் சொற்கள் ஒன்பது எனத் தொல்காப்பியம் வரையறுத்துக் கூறுகிறது. இவற்றிற் ...

                                               

மகரம் மயங்கா னகரத் தொடர்மொழி

மகரம் என்னும் சொல் ம் என்னும் மெய்யழுத்தைக் குறிக்கும். மொழியின் இறுதியில் வரும் மகரம் னகர எழுத்தாக மயங்கி வரும். எடுத்துக்காட்டு - அறம் செய்யான் அறன் அழீஇ, அறன் வலியுறுத்தல், புறனடை - என்பன மயங்கி வந்தன. இப்படி மயங்காமல் வரும் னகரத் தொடர்மொழிகள் ...

                                               

மயங்கொலிச் சொற்கள்

மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப ...

                                               

மரூஉ

மரூஉ என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று வருவது. மரூஉ என்றால் உயிர் அளபெடை. எடுத்துக்காட்டுகள் யார் - ஆர் உபாத்தியாயர் - வாத்தியார், வாத்தி பருத்தித்துறை - பருத்துறை போழ்து - பொழு ...

                                               

மறைந்த தமிழியல் மரபுகள்

தமிழியல் என்பது தமிழ் மொழியின் இயல்பு. இந்த இயல்பானது முன்னோர் காலந்தொட்டு நமக்கு வழிவழியாக வருகிறது. வழிவழியாக வந்த இது நம் மொழியில் மரத்துப்போய் இருக்கிறது. வாக்கிய அமைப்புகளும், அதில் உள்ள சொல் குறியீடுகளும், சொல்லை ஒலிக்கும் பாங்கும்,சொல்லிரு ...

                                               

மன்னாப் பொருள்

மன்னாப் பொருள் என்பது ஓர் இலக்கணக் குறியீடு. தொல்காப்பியம் இதனைக் குறிப்பிடுகிறது. மன்னாப் பொருளும் அன்ன இயற்றே சினைமுதல் கிளவி செயலாற்றும் பாங்கைக் குறிப்பிடும்போது உம் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று கூறிய அடுத்த நூற்பா இவ்வாறு குறிப்பிடுகிறது. ...

                                               

மாணாக்கனது வரலாறு

மாணாக்கனது வரலாறு என்பது பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் காணப்படும் பொதுப் பாயிரத்தின் உறுப்புகளில் ஒன்றாகும். இதில் மூன்று நூற்பாக்களில் மாணாக்கருக்கான கீழ்க்காணும் விவரங்கள் தரப்பட்டுள்ளன: மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம் மாணாக்கர் இலக்கணம் மூவகை மா ...

                                               

முன்னிலைப் பாடல்கள்

வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னில ...

                                               

மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)

மெய்யில் படுவது மெய்ப்பாடு. அதாவது உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஒன்று மெய்ப்பாட்டியல். தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாடுகள் எட்டு. அவை தோன்றும் இடங்கள் என்று ஒவ்வொன்றும் 4 ...

                                               

மெய்யீற்றுப் புணரியல் (நன்னூல்)

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து இயல்களில் நான்காவது இயல் மெய்யீற்றுப் புணரியல் ஆகும். இதில் மொத்தம் 36 நூற்பாக்கள் உள்ளன.

                                               

மொழிநடை நிலம்

தமிழின் மொழிநடையை உரைநடை, பாட்டுநடை எனப் பொதுப்பட் பகுத்துக் காண்பது வழக்கம். தொல்காப்பியம் இதனை அக்கால வழக்கப்படி ஏழு பகுதிகளாகப் பகுத்துக் காட்டுகிறது.

                                               

மொழியீறு

சொல்லை word மொழி என்பது பண்டைய வழக்கு. மொழியின் இறுதியில் வரும் எழுத்தை மொழியீறு என இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியம் அவற்றை 24 என வரையறுத்துக் காட்டுகிறது. உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 11, குற்றியஙுகர ஈறு 1, ஆக 24 எழுத்துக்கள் மொழிய ...

                                               

வண்ணச்சினைச் சொல்

தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் மயங்காமல் வரவேண்டியவை குறித்துக் குறிப்பிட்டு வரும்போது முதற்சொல்லை விளக்க வரும் சினைச்சொ- ல்லும், அடைச்சொல்லும் முதற்சொல்லும் எவ்வாறு வரவேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

                                               

வரையறுத்த பாட்டியல்

வரையறுத்த பாட்டியல் என்பது ஒரு பாட்டியல் நூல். ஆனால் இது மிகவும் சிறியது. வாழ்த்து, அவையடக்கம், வருபொருள் என்பன கூறும் மூன்று பாடல்களுடன் சேர்த்துப் பத்துப் பாடல்களே இந்நூலில் காணப்படுகின்றன. எனவே எடுத்த பொருள் பற்றிக் கூறுவன ஏழு பாடல்கள் மட்டுமே ...

                                               

வல்லினம் மிகும் இடங்கள்

வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் இறுதியில் ஒரு வல்லின எழுத்து சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →