ⓘ Free online encyclopedia. Did you know? page 290



                                               

குறம்

குறம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்பாகக் குறம் என்னும் உறுப்பு வருவது பண்டைய முறை. இது நாளடைவில் குறவஞ்சி என்னும் தனிவகைச் சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியப் பகுதிகளில் கு ...

                                               

குறியறி சிந்து

குறியறி சிந்து என்பது சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. பாவை ஒருத்தி பவனி வரும் மின்னலால் எதிர்ப்பட்டு ஆசை மயக்கம் கொண்டு தன் ஆரத்தைக் கழற்றி எடுத்துக்கொண்டு அவளுக்கு அணிவிக்கச் செல்லும் மன்மத வேள் போன்ற ஒரு ...

                                               

கேசாதிபாதம்

கேசாதிபாதம் என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கேசாதிபாதம் என்பது கேசம் முதல் பாதம் வரை என்னும் பொருள்தரும் வடமொழிச் சொல்லாகும். இங்கே கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். இதற்கு அமையக் கலிவெண்பாவால் தலை ...

                                               

கைக்கிளை (சிற்றிலக்கியம்)

கைக்கிளை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். ஒருதலைக் காமம்|ஒருதலைக் காமத்தை ஐந்து விருத்தங்களால் கூறுவது கைக்கிளை என்பது இலக்கணம். கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத் ...

                                               

கையறுநிலை

கையறுநிலை என்னும் துறைக் குறிப்புடன் புறநானூற்றில் 41 பாடல்கள் உள்ளன. கை என்னும் சொல் ஆகுபெயராய் அதன் செயலைக் குறிக்கும். தலைவனை இழந்து செயலற்று நிற்பது ‘கையறுநிலை’.

                                               

கோவை (இலக்கியம்)

தமிழ் இலக்கியத்தில் கோவை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. அகப்பொருள் பாடல்கள் தொகை நூல்களில் மிகுதியாக இடம் பெற்று விளங்கியபோதும், துறைகள் எல்லாம் தேர்ந்து, நூல் ஒன்று புனைய வேண்டும் என்ற அவாவே "கோவை" இலக்கியம் தோன்றக் காரணம் எனலாம். ஐந்த ...

                                               

சிந்து (சிற்றிலக்கியம்)

செய்யுள் இலக்கணத்தில் ‘சிந்தியல் வெண்பா’ என்பது மூன்று அடிகளை உடைய வெண்பாப் பாடல். கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்பாக வரும் ‘சிந்து’ பாடல் ஒருவகை இசைப்பாடல். திருவாழி பரப்பினான் கூத்தன் என்னும் புலவர் பாடிய சிந்து நூல் பற்றிக் கல்வெட்டு ...

                                               

சிறுகாப்பியம்

பெருங்காப்பியம் என்பது பாட்டுடைத் தலைவனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பாக இருக்கும். சிறுகாப்பியம் பாட்டுடைத் தலைவனின் ஒருசில வாழ்க்கைக் கூறுகளை மட்டுமே கூறும்.ஐம்பெருங்காப்பியங்கள். ஐஞ்சிறு காப்பியங்கள் என இவற்றைத் தொகுத்து வகைப்படுத்தி ...

                                               

சின்னப்பூ

சின்னப்பூ என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் அரசுக்கு உரிய பத்து உறுப்புக்களாகும் அவற ...

                                               

செருக்களவஞ்சி

செருக்களவஞ்சி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். செருக்களம் என்பது போர்க்களம் என்னும் பொருள் உடையது. போர்க்களத்தில் நிகழும் கொடூரங்களை ஆசிரியப் பாவினாலும், வஞ்சிப்பாவின ...

                                               

செவியறிவுறூஉ

இத் துறைப் பாடல்கள் புறநானூற்றில் 8 உள்ளன. இவை பாடாண் திணையின்பாற் பட்டவை. கறந்த பால் புளித்தாலும், பகல் இருட்டாக மாறினாலும், நால்வேத நெறி உலகில் நிகழாமல் போனாலும், நீயும் நின் சுற்றமும், நூற்றுவர் இறந்த பாரதப் போரில் இருபால் வீரர்களுக்கும் பெருஞ ...

                                               

தசாங்கப்பத்து

தசாங்கப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தசாங்கம் என்பது, தசம், அங்கம் என்னும் இரண்டு வடமொழிச் சேர்க்கையால் உருவானது. தசம் என்பது பத்து என்னும் பொருள் கொண்ட ...

                                               

தாண்டகம்

தாண்டகம் என்பது தமிழ்ச் செய்யுள் வகையில் ஒன்று. கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த இலக்கியங்களிலே இச்செய்யுள் வகையைக் காணலாம். அறுசீரடி அல்லது எண்சீரடி பயின்ற செய்யுளினால் ஆடவரையோ கடவுளரையோ பாடுவதற்குரியது தாண்டகம் எனும் சிற்றிலக்கிய வகை பி ...

                                               

தாரகைமாலை

தாரகைமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். இப்பெயரிலான சிற்றிலக்கியம் குறித்து இரண்டு வகையான இலக்கணங்கள் பாட்டியல் நூல்களில் காணப்படுகின்றன. கற்பிற் சிறந்த அருந்ததியை ...

                                               

தானைமாலை

தானைமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலைக்குரிய இலக்கணம் ஆகும்.

                                               

திருஎழுகூற்றிருக்கை

திருவெழுகூற்றிருக்கை என்னும் பெயரில் அருணகிரிநாதர் திருஞான சம்பந்தர் நக்கீர தேவ நாயனார் திருமங்கை ஆழ்வார் ஆகியோர் பாடிய பாடல்கள் உள்ளன. இதில் ஏரகத்து இறைவன் என்று சுவாமிமலை முருகனைப் புலவர் வாழ்த்துகிறார். அருணகிரிநாதர் பாடிய திரு எழுகூற்று இருக் ...

                                               

துயிலெடை நிலை

துயிலெடை நிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. ...

                                               

தூது (பாட்டியல்)

அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது. பல தூதுக்களில் தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமைகி ...

                                               

நயனப்பத்து

நயனப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். நயனம் என்பது வடமொழியில் கண்ணைக் குறிக்கும் ஒரு சொல். எனவே, கண்களைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறை ...

                                               

நவமணிமாலை

நவமணிமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். நவம் என்னும் வடமொழிச் சொல் தமிழில் ஒன்பது என்பதைக் குறிக்கும். எனவே நவமணிமாலை என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் க ...

                                               

நாமமாலை

நாமமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்துவரப் வஞ்சிப்பாவால் ஆண்களைப் பாடுவது நாமமாலை எனப்படுகின்றது.

                                               

நாழிகைவெண்பா

நாழிகைவெண்பா என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். இது நாழிகைவெண்பா, நாழிகைக்கவி, நாழிகைச்செய்யுள், கடிகைவெண்பா போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. அமரர்களிடத்து ...

                                               

நான்மணிமாலை

நான்மணிமாலை என்பது தமிழில் உள்ள 90 பிரபந்த வகைகளுள் ஒன்று. அந்தாதியாக நாற்பது செய்யுள்களில் அமையும் இப் பிரபந்த வகையில் வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என்னும் பாடல் வகைகள் மாறி மாறி அமைந்து வரும். இவ்வாறு நான்கு பா வகைகள் மாலை போல் கோர்வையாக ...

                                               

நானாற்பது (பாட்டியல்)

நானாற்பது என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். இதை, நாற்பது என்றும் சில நூல்கள் குறிப்பிடுகின்றன. காலம், இடம் பொருள் போன்றவை கருப்பொருளாக வர நாற்பது வெண்பாக்களால் அமைவது ...

                                               

நூற்றந்தாதி

நூற்றந்தாதி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். நூறு வெண்பாக்களால் அல்லது நூறு கலித்துறைப் பாடல்களினால் பொருள் தோன்ற அந்தாதியாகப் பாடுவதே நூற்றந்தாதி என்பது பாட்டியல் நூ ...

                                               

பண்ணை விசித்திரம்

பண்ணை விசித்திரம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. மாதர் இருவர் நூலின் தலைமகள்களாக அமைய, இறைவனை வழிபடுதல், தம் நாட்டைப் பற்றிக் கூறல், நாட்டு நிலத்தில் அமையும் திணைமயக்கம், பாயும் ஆறு, மேகம் மழை பொழி ...

                                               

பதிற்றந்தாதி

பதிற்றந்தாதி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பத்து வெண்பாக்களால் அல்லது பத்துக் கலித்துறைப் பாடல்களினால் பொருள் தோன்றப் பாடுவதே பதிற்றந்தாதி என்பது பாட்டியல் நூல்கள் ...

                                               

பரணி (இலக்கியம்)

பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.இதை, ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் பன்னிரு பாட்டியல் விள ...

                                               

பல்சந்தமாலை

பல்சந்தமாலை என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களை வடமொழியில் பிரபந்தங்கள் என்பர். பல்சந்தமாலையில் 10 முதல் 100 பாடல்கள் வரை இருக்கும். இவற்றில் ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒவ்வொரு சந்தத்தில் அமையும். பல சந்தங்களைக் கொண்டு அ ...

                                               

உழத்திப்பாட்டு

பள்ளு எனும் நூல்வகை தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது மருதநில இலக்கியமாகும். பள்ளு இலக்கியங்கள், பழந்தமிழ் வேளாண்மைக் குடிகளான பள்ளர்களின் வாழ்க்கை பற்றியவை. தமிழில் பெருந்தொகையான பள்ளு இலக்கியங்கள் உள்ளன. தமிழ் சிற்றிலக்கிய வகைகளிலே, பள் ...

                                               

பன்மணிமாலை

பன்மணிமாலை என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையில் ஒருபோகு, அம்மானை, ஊசல் என்னும் மூன்று உறுப்புக்களும் நீங்கலாக ஏனைய இலக்கணங்கள் அனைத்தும் அமையப் பெற்றதே பல்மணிமாலை எனப் பாட்டியல் நூ ...

                                               

பாதாதிகேசம்

பாதாதிகேசம் என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. பாதாதிகேசம் என்பது பாதம்முதல் கேசம்வரை என்னும் பொருள்தரும் வடமொழிச் சொல்லாகும். இங்கே கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். இதற்கு அமையக் கலிவெண்பாவால் பாதத் ...

                                               

பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, க ...

                                               

புகழ்ச்சி மாலை

புகழ்ச்சி மாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்துவர வஞ்சிப்பாவால் பெண்களைப் பாடுவது புகழ்ச்சி மாலை என்பது பாட்டியல் நூல்கள் தரும் ...

                                               

பெயர் நேரிசை

பெயர் நேரிசை எனப்படுவது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாவகைகளுள் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவதே பெயர் நேரிசை என்று பாட்டியல் நூல்கள் இ ...

                                               

பெயரின்னிசை

பெயரின்னிசை அல்லது பெயர் இன்னிசை எனப்படுவது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாவகைகளுள் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவனின் பெயரைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது இன்னிசை வெண்பாக்களால் பாடுவதே பெயரின்னிசை என்று ...

                                               

போர்க்கெழுவஞ்சி

போர்க்கெழுவஞ்சி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். வஞ்சிப்பூ மாலை அணிந்து போருக்குச் செல்லும் மன்னனின் படை எழுச்சியின் சிறப்பை அகவற்பாவினால் கூறுதல் போர்க்கெழு வஞ்சி என ...

                                               

மங்கலவள்ளை

மங்கலவள்ளை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். உயர் குலத்துப் பெண்ணொருத்தியை ஒன்பது வெண்பாக்களினால் வகுப்புறப் பாடுதலே மங்கலவள்ளை என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்.

                                               

மாலை (சிற்றிலக்கியம்)

ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பல பாவகைகள் கொண்டு பாடுவதை மாலை என்ற சிற்றிலக்கியம் என்று என்கிறார்கள். 96 வகை சிற்றிலக்கிய வகைகளில் 28 வகை மாலைகள் உள்ளன.

                                               

முதுமொழி வெண்பா

முதுமொழி வெண்பாக்கள் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தவை. இவ்வகையில் பதினாறு நூல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரும்பாலும் இவை நேரிசை வெண்பாக்களால் ஆனவை. வெண்பாவின் பின் இரு வரிகள் திருக்குறளாக அமைய, முதல் இரு வரிகளில் எடுத்துக்கொண்ட திருக்குறள ...

                                               

மும்மணிக்கோவை

மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒரு வகையாகும். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். 30 பாடல்களைக் கொண்டு அமையும் இந்தச் சிற்றிலக்கியவகையில் பாடல்கள் அந்தா ...

                                               

முலைப்பத்து

முலைப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பெண்களின் முலைகளைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வருணித்துப் பாடுவதே முலைப்பத்து ...

                                               

மெய்க்கீர்த்திமாலை

மெய்க்கீர்த்திமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். மரபுவழியாக வரும் தலைவனின் புகழை சொற்சீரடி எனப்படும் கட்டுரைச் செய்யுள்களால் அழகு ததும்ப விரிவாகக் கூறுதல் மெய்க்கீ ...

                                               

வசந்தமாலை

வசந்தமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தென்றலை வருணித்துப் பாடுவதே வசந்தமாலை. இது அந்தாதியாக அமையும்.

                                               

வண்ணம் (சிற்றிலக்கியம்)

வண்ணம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. இரட்டைப்புலவர் பாடிய ஏகாம்பரநாதர் வண்ணம் என்னும் நூலில் இதன் அமைப்பைக் காணலாம். பாடல் பகுதியில் வினாவோ, வினவுவது போன்ற செய்தியோ கூறப்பட்டிருக்கும். அதற்கு விடையாக இரண்டொரு சொல்லில் விடையும் சொல்லப்பட்டிர ...

                                               

வரலாற்று வஞ்சி

வரலாற்று வஞ்சி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அரசன் படையெடுத்துச் செல்வதை ஆசிரியப்பாவால் எடுத்துக்கூறுவதே வரலாற்று வஞ்சி எனப்படும். வஞ்சிப்பாவால் வாழ்த்துவது வரலாற் ...

                                               

வருக்கமாலை

வருக்கமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தமிழ் மொழியில் முதலில் வரும் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முத ...

                                               

வளமடல்

வளமடல் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். சில பாட்டியல் நூல்கள் இதற்கு மடல் என்றே பெயர் குறிப்பிடுகின்றன. இச்சொல் பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் மடலூர்த ...

                                               

வீரவெட்சிமாலை

வீரவெட்சிமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். எதிரிகளின் பகுதிக்குள் நுழைந்து ஆநிரைகளைக் கவர்ந்து வரும் வீரனின் வெற்றி பற்றிக் கூறுவது வீரவெட்சிமாலை எனப் பாட்டியல் ந ...

                                               

வெட்சிக்கரந்தை மஞ்சரி

வெட்சிக்கரந்தை மஞ்சரி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். மஞ்சரி என்பது பூ மாலையோடு சேர்த்துக் கையில் பிடித்துக்கொள்ளத் தரப்படும் பூச்செண்டு. பாடல்களைச் பூச்செண்டு போல் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →