ⓘ Free online encyclopedia. Did you know? page 330



                                               

ஐயனாரிதனார்

ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலின் ஆசிரியர் ஆவார். இவர் சேர மன்னர்களின் மரபில் தோன்றியவர். இவர் சேர மரபினராயினும் தமது நூலைத் தமிழ் வேந்தர் மூவர்க்கும் பொதுவாகவே செய்துள்ளார். ஐயனாரிதன் என்பதற்கு ஐயங்கள் தீர்க்கும் ஆசிரியர் எனப்பொருள் ...

                                               

ஒட்டக்கூத்தர்

ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய ...

                                               

ஒப்பிலாமணிப் புலவர்

ஒப்பிலாமணிப் புலவர் என்னும் புலவர் பாடியனவாக 27 பாடல்கள் புறத்திரட்டு நூலில் உள்ளன. அவற்றில் ஒன்று ஆசிரியப்பா. மற்றொன்று விருத்தம். ஏனையவை வெண்பாக்கள். இப் புலவர் ஊர் ஊராகச் சென்று அவ்வூரில் குடிகொண்டுள்ள இறைவனைப் போற்றிச் சுவை ததும்பும் பாடல்களை ...

                                               

ஔவையார்

ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.

                                               

ஔவையார் (அங்கவை சங்கவை மணம்)

ஔவையார் பலரில் ஒருவர் பாரிமகளிர் அங்கவை, சங்கவை என்பவர்களை மலையரசனான தெய்வீகன் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தவர். இத்திருமணம் பற்றிக் கூறும் பாடல்கள் சில உள்ளன.

                                               

கச்சபால ஐயர்

கச்சபால ஐயர் என்பவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவரது ஐந்து பாடல்கள் தனிப்பாடல் திரட்டு நூலில் இடம் பெற்றுள்ளன. விநாயகப் பெருமான்மீது பற்றுக் கொண்டவர். கணாபத்தியம் இவரது வழிபாடு. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தனிப்பாடல் திரட்டு நூல ...

                                               

கடலூர் பலராம ஐயர்

பலராம ஐயர் என்பவர் தமிழில் நாடகங்கள், செய்யுள்கள் பல இயற்றியவர். தமிழ்மொழியில் முதல் துன்பியல் நாடகத்தை இயற்றியவர் இவரே. நாடகத்துறையில் பல புதுமைகளைப் புகுத்தியவர் இவர் ஆவார்.

                                               

கடவுள் மாமுனிவர்

கடவுள் மாமுனிவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பாவலர்களில் ஒருவர். திருவாதவூரார் புராணம் என்னும் நூலை இயற்றியவர். நம்பியாண்டார் நம்பி சிவனடியார்களை 63 பேர் எனத் தொகுத்துக் காட்டினார். பெரியபுராணம் இந்த 63 பேர்களின் வரலாற்றை விளக்கிப் பாடியது ...

                                               

கடிகைமுத்துப் புலவர்

கடிகைமுத்துப் புலவர் உமறுப் புலவர் பெருமானுக்கு ஆசிரியராக விளங்கியவர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவர் பாடியனவாக 246 பாடல்கள் உள்ளன. அவை மடக்கு, பின்முடுகு வெண்பா வெண்டுறை, முன்முடுகு வெண்பா, விருத்தம், கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, கொச்சக ...

                                               

கண்ணங் கூத்தனார்

கண்ணங் கூத்தனார் அல்லது கண்ணங்கூத்தனார் என்பவர் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கார் நாற்பது என்னும் நூலைப் பாடியவர். கண்ணங் கொற்றனார் என்னும் பெயர் கொண்ட புலவர் ஒருவர் நற்றிணைத் தொகுப்பில் உ ...

                                               

கபிலபரணர்

சிவபெருமான் திருஅந்தாதி என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடிய கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் என்னும் சைவ சமய நண்பர்களைக் குறிக்கக் கபிலபரணர் என்னும் தொடரை முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர். இருவரும் புலவர்கள். இவர்கள் சங்கநூல் பாடல்களைப் பாடிய க ...

                                               

கபிலர் (திருவள்ளுவமாலைப் பாடல் பாடியவர்)

திருவள்ளுவமாலை என்னும் நூல் திருவள்ளுவரின் பெருமைகளையும், திருக்குறளின் பகுப்பமைதிகளையும் போற்றிக் கூறும் ஒரு தொகுப்பு நூல், இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் பலர் எனக் காட்டப்பட்டுள்ளது. 1050 ஆம் ஆண்டி வாக்கில் ஒரு புலவர் திருவள்ளுவமாலை பாடி ...

                                               

கபிலர் (பாட்டியல் புலவர்)

கபிலர் என்னும் பெயர் கொண்ட புலவர்களில் பாட்டியல் பாடிய கபிலர் இவர். பாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும். புலம் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும் இலக்கம் மொழியை அறிவியல் பார்வையில் அணுகும். முன்னோர் பாடல்களில் ...

                                               

கம்பர்

கம்பர் என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய கம்பராமாயணம் நூலானது புகழ் பெற்றதாகும். கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட ...

                                               

கம்பர் தனிப்பாடல்கள்

கம்பர் தனிப்பாடல்கள் பாடிய கம்பர் கம்பராமாயணம் பாடியவர் அல்லர் என்பதை பாடல்களில் அமைந்துள்ள நடையோட்டம் காட்டும். கம்பராமாயணம் அரங்கேறியது கி.பி. 885 கம்பர் தனிப்பாடல்களில் வரும் பாடல்கள் ஒட்டக்கூத்தரோடு போட்டியிட்டுக்கொண்டு பாடியனவாக வருகின்றன. ஒ ...

                                               

கம்பர் வீட்டு வெள்ளாட்டி பாடல்

அந்தத் தச்சனின் வீடு நெல் வளர்ந்து மடிந்து விளையும் நிலத்துக்கு நடுவில் இருந்ததாம். அவன் மலைக்கல் போன்ற தோளை உடையவனாம். அவன் பெயர் கங்கணகண கணவன். அவன் மனைவி வில் போன்ற புருவம் படிந்த நெற்றி கொண்டவளாம். அவள் பெயர் மின்மினி மினிமி. அவர்களுக்கு ஒரு ...

                                               

கல்லாடனார்

கல்லாடனார் என்னும் பெயர் கொண்ட தமிழ்ப்புலவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கல்லாடர் எனவும் குறிப்பிடப்படுகின்றனர். தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடர் கல்லாட தேவ நாயனார் - திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பாடியவ ...

                                               

கவிஞர் வான்முகில்

இவர் வே.சண்முக சுந்தரம்- விசாலாட்சி அம்மாளுக்கு மகனாக 05-01-1944 இல் பிறந்தார். இவர் இயற்பெயர் ச.ச.குமார் என்பது. இவரது துணைவியார் பெயர் காந்திமதி. இவரும் இலக்கிய ஆர்வம் உடையவர்.இளங்கலையில் விலங்கியல் பட்டம் பெற்ற இவர் தமிழ், ஆங்கிலப் புலமை பெற்ற ...

                                               

காகபுசண்டர்

காகபுசண்டர் அல்லது காகபுருடர் அல்லது காகபுஜண்டர் என்பவர் சித்தர்களில் ஒருவர். இவர் ரோமச முனிவரின் தந்தை. இவர் மாயூரத்தில் பிறந்தார். மயூரநாதனின் அருளால் சாகா வரம் பெற்று காகமாக பல ஆண்டுகள் வாழ அருள் பெற்றதால் காகபுசுண்டர் என்ற பெயர் பெற்றார். காக ...

                                               

காங்கேயர்

காங்கேயர், 14-ம் நூற்றாண்டில் வாழந்த சைவ சமயத்தைச் சேர்ந்த புலவராவார். இவர் தொண்டை மண்டலச் செங்குந்தர் மரபினில் பிறந்தவர். இவர் எழுதிய உரிச்சொல் நிகண்டு, மிகவும் பிரபலமான அகராதி ஆகும். இது ஆண்டிப்புலவர் எழுதிய ஆசிரிய நிகண்டுவில் குறிப்பிடப்பட்டுள ...

                                               

காசிக்கலியன் கவிராயர்

காசிக்கலியன் கவிராயர் என்பவர் காசியைச் சேர்ந்த ஒரு புலவர் ஆவார். இப் புலவரைப் பற்றியும், அவர் இயற்றிய நூல்களைப் பற்றியும் தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது. வீரபாண்டியன் குடைமங்கலம், வீ ...

                                               

காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்

காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் என்பவர் 18 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இராமலிங்க சுவாமிகள், அஷ்டாவதனம் சபாபதி முதலியார் ஆகியோரின் ஆசிரியர் ஆவார்.

                                               

காலிங்கர்

திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் காலிங்கர் என்பவர் ஒருவர். திருக்குறள் உரைக்கொத்து நூலில் இவரது பெயர் ‘கவிப்பெருமாள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது பெயரைக் ‘காளிங்கர்’ எனவும் வழங்குவர். கண்ணன் காளிங்கன் தலைமேல் ஏறி ஆடினான் என்னும் கதையைக் ...

                                               

காளமேகம்

காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சைவப் பா ...

                                               

கூரத்தாழ்வார்

கூரத்தாழ்வார் இராமானுசரின் மாணாக்கருள் முதன்மையானவர். ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். ஞானத்தில் சிறந்த ஆண்டாள் இவரது மனைவியின் பெயர். தேசத்தின் பிறப்பகு ...

                                               

கோ. சுப்பிரமணியன்

கோ. சுப்பிரமணியன் என்பவர் வழக்கறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்து தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளார். சைவ சமய நூல்கள் பலவும் இயற்றியுள்ளார்.

                                               

கோவூர் கிழார் (திருவள்ளுவமாலை)

கோவூர் கிழார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் சிலர் காலப் பாதையில் காணப்படுகின்றனர். திருவள்ளுவமாலை பாடல்களில் ஒன்று கோவூர் கிழார் பாடியதாக அடைவு செய்யப்பட்டுள்ளது. சங்ககாலக் கோவூர் கிழார், பாட்டியல் நூல் பாடிய கோவூர் கிழார் ஆகிய புகழ்பெற்ற புலவர்க ...

                                               

கோனேரியப்பர்

கோனேரியப்பர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். உபதேச காண்டம் என்னும் நூல் பாடியவர். உபதேச காண்டம் என்னும் பெயரில் மற்றொரு புலவர் ஞானவரோதயர் பாடிய நூலும் உள்ளது. தமிழிலுள்ள இரண்டு ‘உபதேச காண்டம்’ நூல்களையும் ஒப்பிடும்போது ஞானவரோதயர் நூல் வடமொழி ந ...

                                               

சங்கம் மருவிய காலப் புலவர்களின் பட்டியல்

சங்க காலப் புலவர்கள் 473 பேர். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு இவற்றில் 17 நூல்களைப் பாடிய 17 புலவர்கள் 17 பேர். நாலடியார் நூல் சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவர்களில் கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் ...

                                               

சத்திமுத்தப் புலவர்

சத்திமுத்தப் புலவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று தம் ஊர்விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச் சுவரின் அருகில் குளிருக்கு ஒதுங்கியிருக்கும் போது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலு ...

                                               

சிவக்கொழுந்து தேசிகர்

சிவக்கொழுந்து தேசிகர் என்பவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிற்றிலக்கியப் புலவர் ஆவார். சிவக்கொழுந்து தேசிகர் தமிழ் நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள கொட்டையூர் என்னும் இடத்தவர். இவரின் தந்தை பெயர் தண்டபாணி தேசிகர். சைவ மரபைச் சேர்ந்தவர். தமிழ் இ ...

                                               

சிவஞான வள்ளல்

சிவஞான வள்ளல் சீர்காழியில் வாழ்ந்தவர். காழிக் சீர்காழி கண்ணுடைய வள்ளல் என்பவரின் மாணாக்கர் சுயம்பிரகாச வள்ளல். சுயம்பிரகாச வள்ளலின் மாணாக்கர் சிவஞான வள்ளல். இவர் கையாளும் நூல்களில் குறிப்பிடத் தக்கவை இவர் கையாளும் தொடர்களைப் கொண்ட முன்னோர் நூல்கள்

                                               

சிற்றம்பல நாடிகள்

சிற்றம்பல நாடிகள் என்பவர் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெரியார். இவரைப் பழுதை கட்டிச் சிற்றம்பல நாடிகள் எனவும் கூறுவர். இவர் எப்போதும் மாணவர் திருக்கூட்டத்தோடு வாழ்ந்துவந்தார். தில்லைச் சிற்றம்பலத்தையே இவர் நாடியதால், இவர் தம் நாடித்துடிப்பா ...

                                               

சீத்தலைச்சாத்தனார் இயற்றிய திருவள்ளுவமாலைப் பாடல்

புலவர் பெயர்களைப் பதித்து உருவாக்கப்பட்ட நூல்களில் ஒன்று திருவள்ளுவமாலை. இதில் ”சீத்தலைச்சாத்தனார்” என்னும் பெயரில் அடைவு செய்யப்பட்டுள்ள பாடல் ஒன்று உள்ளது. மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும் மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மு ...

                                               

சுப்பிரமணியப் புலவர்

சுப்பிரமணியப் புலவர் ஒரு தமிழ்ப்புலவர். இவர் தன் பாடலில் பயன்படுத்தியுள்ள சலாம், பராக், ரவிக்கை முதலான சொற்கள் இவரை 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வாழ்ந்தவர் என்பதை வலியுறுத்துகின்றன. இவர் தன் பாடலில் வடுகதுரை என்னும் வெள்ளைக்காரத் துரையையும், அ ...

                                               

செம்பியன் நிலவழகன்

செம்பியன் நிலவழகன் என்பவர் தமிழ் புலவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் ஜெயராமன். இவர் தன் ஊரின் பெயரைத் தனது புனைப்பெயருக்கு முன்னொட்டாக அமைத்துக்கொண்டுள்ளார்.

                                               

செய்குத்தம்பி பாவலர்

சதாவதானி செய்குதம்பி பாவலர் தமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத ...

                                               

செயங்கொண்டார்

செயங்கொண்டார் என்னும் புலவர் பிற்கால சோழர் கால இலக்கியமான கலிங்கத்துப்பரணியைப் பாடியவர். முதலாம் குலோத்துங்கனுடைய அவைக்களப் புலவராக இருந்தவர். இவர் தீபங்குடியைச் சார்ந்தவராதலின் அருகர் என்பர். இந்நூலின் கப்புச் செய்யுளால் இவர் சைவர் என அறியலாம் ம ...

                                               

சேக்கிழார்

சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவ ...

                                               

சேரந்தையப் புலவர்

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை எனும் ஊரில் வாழ்ந்த புலவர் சேரந்தையப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்றிற்கு மகிழ்ந்த அரசன் கட்டபொம்மன் இந்தப் புலவரின் சமுதாயத்தினருக்குச் சிறப்பளிக்கும் விதமாகத் தைப்பூசத் தினத்தன்று திருச்செந்தூர் முருகன் உற்சவச் சிலை ...

                                               

சேறைக் கவிராச பிள்ளை

கவிராச பிள்ளை என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். இவர் சேறைக் கவிராசன் என்றும் போற்றப்படுகிறார். இந்தப் பெயரை இவர் தன் உலாக் கண்ணியிலேயே குறிப்பிட்டுள்ளார். இவர் கருணேசன் மரபினர். இதே நூற்றாண்டில் வாழ்ந்த வீரை கவிராச பண்டிதன் என்பவ ...

                                               

சையிது முகமது அண்ணாவியார்

சையிது முகமது அண்ணாவியார் என்பவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவராவார். அண்ணாவியார் மதுரையில் செய்கு மீரான் லெப்பை என்வருக்கு மகனாக பிறந்தவர்.

                                               

சைவ எல்லப்ப நாவலர்

சைவ எல்லப்ப நாவலர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர். எல் என்னும் சொல் வெளிச்சத்தைக் குறிக்கும். எல்லே இலக்கம் – தொல்காப்பியம் உரியியல் இதனால் எல்லப்பன் என்னும் பெயர் கதிரவனைக் குறிக்கும் பெயர் என்பதை உணரலாம். இவர் இயற்றிய புராண நூல்கள் ஆற ...

                                               

ஞானவரோதயர்

ஞானவரோதயர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். உபதேச காண்டம் என்னும் நூல் பாடியவர். உபதேச காண்டம் என்னும் பெயரில் மற்றொரு புலவர் கோனேரியப்பர் பாடிய நூலும் உள்ளது. காஞ்சிபுரம் ஆயிரங்கால் மண்டபத்திலிள்ள ஆறுமுகசாமி முருகப்பெருமான் அருளால் கச்சியப்பர் ...

                                               

தத்துவராயர்

தத்துவராயர் என்பவர் கிபி 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். வடமொழி வேதாந்த நெறிக்குத் தமிழில் இலக்கணம் கண்ட முதல் ஆசிரியர். இவர் தன் ஆசிரியர் சொரூபானந்தர் உதவியுடன் 18 நூல்களைத் தமிழில் பாடினார். அவற்றை அடங்கன்முறை என குறிப்பிடுகின்றனர். அடங் ...

                                               

தாண்டவராய முதலியார்

உழலூர் வேலப்ப தேசிகர், வரதப்ப முதலியார், வடுகநாதத் தம்பிரான் முதலியோரிடத்து தமிழ்ப் பயின்றுள்ளார். ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்துஸ்தானி, மராத்தி, சமஸ்கிருதம் முதலான மொழிகளைக் கற்றவர். மகாவித்துவான் இராமநுச கவிராயர், சரவணப் பெருமாளையர் ஆகியோரி ...

                                               

தாயுமானவர்

இவர் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர் மற்றும் தாயார் கெசவல்லி அம்மையார் ஆவார்கள். இவர் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமா ...

                                               

தி. க. சுப்பராய செட்டியார்

தி. க. சுப்பராய செட்டியார் என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர்களில் இவர் முதன்மையானவர். 19 ஆம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த புலவர்களில் ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த புல ...

                                               

திரிகூடராசப்பர்

இவர் சைவ வேளாளர் குலம் என்றும்; திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைவராக இலகியிருந்த மறைத்திரு சுப்பிரமணிய சுவாமிகளின் மரபு வழியினர் என்றும் செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது.

                                               

திருக்கோனேரி தாஸ்யை

திருக்கோனேரி தாஸ்யை என்பவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வைணவப் பெண்மணி. திருவாய்மொழி வாசகமாலை என்னும் நூலை எழுதியவர். நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். திருக்கோனேரி என்பது திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள ஏரி. இந்தத் த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →