ⓘ Free online encyclopedia. Did you know? page 363



                                               

பிக்கார்து மொழி

பிக்கார்து மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த உரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது பிரான்சு, பெல்சியம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி பிரெஞ்சு மொழியுடன் அதிக நெருக்கமுடையது.

                                               

லம்பாடி மொழி

லம்பாடி அல்லது பஞ்சாரா என்பது இந்தியாவில் வாழும் லம்பாடி நாடோடி மக்களால் பேசப்படும் மொழி. இது இராஜஸ்தானி மொழியுடன் தொடர்புடைய இந்தோ ஆரிய மொழி ஆகும். கோரா, சிங்களி, சுகளி, லவானி, லம்பானி என்று பல பெயர்களால் இம்மொழி அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, க ...

                                               

எஸ்பெராண்டோ

எஸ்பராண்டோ உலகில் அதிகம் பேசப்படும் கட்டமைக்கப்பட்ட மொழியாகும். எஸ்பெராண்டோ என்பதன் பொருள் நம்பிக்கையுடனான என்பதாகும். 1887இல் எல். எல். சாமன்ஹோஃப் எழுதிய உனுவா லிப்ரோ எனும் நூலில் எஸ்பெராண்டோ பற்றிய தகவல்கள் முதன்முதலாக வெளிவந்தன. கற்றலுக்கு எளி ...

                                               

அலைக்குறி

அலைக்குறி என்பது பல மொழிகளில் பயன்பாட்டில் உள்ள அழுத்தற் குறியீடுகளில் ஒன்று. பெரும்பாலும் எசுப்பானியத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது.

                                               

செருபோகுரோவாசிய மொழி

செருபோகுரோவாசிய மொழி என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த தென் சிலாவிய மொழிகளுள் ஒன்று. இம்மொழி செருபியா, குரோவாசியா, பாசுனியாவும் எர்சகொவினாவும், மான்டினேகிரோ போன்ற நாடுகளின் முதன்மை மொழியாக உள்ளது. இம்மொழியை 15 மில்லியன் மக்கள் பேச ...

                                               

நீநொர்ஸ்க் மொழி

நீநொர்ஸ்க் மொழி என்பது நோர்வே நாட்டின் மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின்ஆட்சி மொழி வடிவங்கள் இரண்டில் ஒன்றாகும். மற்றைய மொழி வடிவம் பூக்மோல் ஆகும். ஆகும். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத ...

                                               

யூரோ ஆங்கிலம்

யூரோ ஆங்கிலம் ஒரு தொகுப்பு ஆகும் பல வகைகள், tamil பயன்படுத்தப்படும். கான்ட்டினென்டல் ஐரோப்பா மற்றும் நிறுவனங்கள், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் அல்லது இளைஞர்கள் மத்தியில் மொபைல் ஐரோப்பியர்கள்.

                                               

சாமிக்கு மொழிகள்

சாமிக்கு மொழிகள் என்பது பத்து மொழிகளை கொண்ட ஒரு குடும்பத்தை குறிக்கும். இம்மொழிகள் ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தில் மலாய் மொழிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. இம்மொழிகள் கம்போதியா, வியட்னாம், அயனன் போன்ற இடங்களில் பேசப்படுகின்றன. சாமிக்கு மொழிகளில் ...

                                               

கொரிய மொழி

கொரிய மொழி தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளின் அரசமொழியாகும். சீனாவின் யான்பியன் பகுதியிலும் பரவலாகப் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 80 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.

                                               

கொரிய எண்குறிகள்

தாயக, சீன-கொரிய எண்குறிகள் முறைமை இரண்டிலும் கொரிய எண்குறிகள் 11 முதல் 19 வரை, பத்து, ஒன்று ஆகிய இலக்கங்களால், கூட்டுமுறையில் குறிக்கப்படுகின்றன. எடுத்துகாட்டாக, 15 எனும் எண் sib-o 십오 எனக் குறிக்கப்படுகிறது; சீன-கொரிய முறைமையில் வழக்கின் il-sib ...

                                               

செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய்

மொழியியல் உருவியத்தில், செயப்படுபொருள்-பயனிலை-எழுவாய் என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் செயப்படுபொருள் முதலாகவும், பயனிலை இரண்டாவதாகவும் எழுவாய் மூன்றாவதாகவும் அமையும். வீட்டுக்கு போகிறான் கண்ணன் என்ற வடிவம் இந்த ...

                                               

இக்சுக்காரியானா மொழி

இக்சுக்காரியானா மொழி கரிபிய மொழிகளுள் ஒன்று. பிரேசிலில், அமேசான் ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான நமுண்டா ஆற்றுப் பகுதியில் வாழும் 600க்குச் சற்றுக் கூடுதலான மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி பேசுபவர்களில் பலர் வைவை மொழியையும், போர்த்துக்கேய ம ...

                                               

அரநாடான்

அரநாடான் மொழி ஒரு திராவிட மொழியாகும். இந்தியாவின் கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இம்மொழி பேசப்படுகிறது. இவர்களிற் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தின் மலப்புறம், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். 2001 ஆம் ஆண்டின் கண ...

                                               

ஆலுக் குறும்பா மொழி

ஆலுக் குறும்பா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 2.500 பேர்களால் பேசப்படுகிறது. இது, "பால் குறும்பா", "ஹால் குறும்பா", போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட ...

                                               

இருளா மொழி

இருளா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 200.000 மக்களால் பேசப்படுகிறது. இது எரவல்லன், எருக்கலா, இரவா, இரு ...

                                               

ஊராளி மொழி

ஊராளி மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென்திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் இம்மொழி பேசப்படுகிறது. இது ஊராழி, ஊர்ளி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. முதல் மொழியாக இம்மொழியைப் பேசு ...

                                               

கன்னடம்

கன்னடம் தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும். பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் ப ...

                                               

காணிக்காரர் மொழி

காணிக்காரர் மொழி ஒரு வகைப்படுத்தப்பாடாத திராவிட மொழியாகும். இந்தியாவில், கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களிலும், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் வாழும் 25.000 மக்கள் இம்மொழியைப் ...

                                               

குடகு மொழி

குடகு மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள குடகு மாவட்டத்தில் வாழும் கொடவர்களால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 500.000 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியில் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் ச ...

                                               

குறுக்ஸ் மொழி

குடக்கு மொழி அல்லது குடுக்கு மொழி என வழங்கப்படும் இம் மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். பிராகுயி, மால்ட்டோ போன்ற பிற வட திராவிட மொழிகளுக்கு நெருக்கமான இம்மொழி, ஓராவோன் மற்றும் கிழான் இனக்குழுவினரால் பேசப்படுகிறது. இம் மொழியைப் பேசுவோர், பீஹார், ஜா ...

                                               

குறும்பா மொழி

குறும்பா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் குறும்பர் பழங்குடிகளால் பேசப்பட்டுவரும் மொழியாகும். இம்மொழியானது 2011 ஆண்டைய மக்கள் கணக்கீட்டின்படி 24.189 பேர்களால் பேசப்படுகிறது. இம்மொ ...

                                               

கோண்டி மொழி

கோண்டி மொழி ஒரு முக்கியமான ஒரு நடு திராவிட மொழியாகும். நடு இந்தியாவிலுள்ள மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏறத்தாழ 2.000.000 கோண்டு மக்களால் பேசப்படுகிறது. இது கோண்டு இனத்தவரின் தாய்மொழியாக இரு ...

                                               

கோத்தர் மொழி

கோத்தர் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் கோத்தர் என்னும் ஒரு பிரிவினரால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 1.400 பேரால் தாய்மொழியாகவும் மேலும் சுமார் 600 பேரால் இரண் ...

                                               

சங்கேதி மொழி

சங்கேதி மொழி ஒரு திராவிட மொழியாகும். முன்னர் கன்னடத்தின் வட்டார வழக்காகக் கருதப்பட்ட இது, தமிழின் கிளைமொழி என்ற கருத்தும் உண்டு." சில ஆய்வாளர்களின் கருத்துப்படி இது ஒரு தனி மொழியாகும். தமிழிலும் கன்னடத்திலும் இருந்து சற்றே வேறுபட்டது. கன்னடத்தின் ...

                                               

திராவிட மொழிக் குடும்பம்

திராவிட மொழிக் குடும்பம் என்பது மரபு வழியாக இணைந்து கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பன ஒன்றுடனொன ...

                                               

துளுவம்

துளு அல்லது துளுவம் ஒரு திராவிட மொழியாகும். இதனை தற்போது இரண்டு மில்லியனுக்கும் சற்று குறைவான மக்கள் பேசுகின்றனர். இது பெரும்பாலும் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களிலும் கேரள மாநிலத்தின் காஸர்கோடு மாவட்டத்திலும் பேசப்படுகி ...

                                               

தெலுங்கு மொழி

தெலுகு தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்காணத்தில் அரசு ஏற்புப்பெற்ற மொழி. இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் தெலுகு ஒன்றாகும். இம்மொழி தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவி ...

                                               

தென் திராவிட மொழிகள்

தென் திராவிட மொழிகள் என்பது திராவிட மொழிக் குடும்பத்தின் உட்பிரிவு ஆகும். இதில் 85-ற்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன. உலக மொழி குடும்பத்தில் 47 மொழிகள் இந்த உட்பிரிவுகளில் இருக்கிறது. தென் திராவிட மொழிகள் பெரும்பாலும் இந்தியாவில் தான் அதிகமாக ...

                                               

தோடா மொழி

தோடா மொழி அல்லது தொதவம் தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்களால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 1600 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இதிலுள்ள உரசொலிகள், உருட்டொலிகள ...

                                               

படுக மொழி

படுக மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென்திராவிட மொழி ஆகும். இம்மொழியைத் தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும், ஏறத்தாழ 250.000 படகர் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி நாவளை உயிர் ஒலிகளைக் கொண்டுள்ளதால், மொழியியல் ஆர்வலர்கள் இதன ...

                                               

பழியன் மொழி

பழியன் தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 10.000 பேர்களால் பேசப்படுகிறது. இது பழயா, பழியான், பழயன், மலைப் பழியர், பொழியர், சேரமார் ...

                                               

பனியா மொழி

பனியா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 63.827 பேர்களால் பேசப்படுகிறது. இதில், 56.952 பேர் கேரளாவிலும், 6393 பேர் தமிழ்நாட்ட ...

                                               

பிராகுயி மொழி

பராஹவி மொழி அல்லது பிராவி மொழி பராஹவி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப் ...

                                               

பொட்டங்கி ஒல்லார் கடாபா மொழி

ஒல்லார் பொட்டாங்கி கடாபா மொழி பார்ஜி-கடாபா பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 15.000 மக்களால் பேசப்படுகிறது. ஒல்லார் கடாபா, ஒல்லா ...

                                               

மலவேடன் மொழி

மலவேடன் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 15.241 பேர்களால் பேசப்படுகிறது. இது மலை வேடன், வேடன், வேட்டுவன், என்றும் அழைக்கப்படுவது உண்டு ...

                                               

முதனிலைத் திராவிட மொழி

முதனிலைத் திராவிட மொழி என்பது, திராவிட மொழிகளுக்கான முதனிலை மொழி ஆகும். முதனிலை மொழிகள் என்பன கருதுகோள் அடிப்படையிலான மொழிகள். இவை மொழியியலாளர்களாற் செய்யப்படுகின்ற மீளுருவாக்கங்கள். அவற்றுக்கு வரலாற்றுப் பதிவுகள் ஏதும் இருப்பதில்லை. இதனால் முதல் ...

                                               

முதுவன் மொழி

முதுவன் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 12.219 மக்களால் பேசப்படுகிறது. இது முடவன், முடுவர், முடுகர், முதுவர் போன்ற ...

                                               

யெருக்குல மொழி

யெருக்குல மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 300.000 மக்களால் பேசப்படுகிறது. இது யெருக்கல, யருக்குல, யெர ...

                                               

ரவுலா மொழி

ரவுலா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 27.413 பேர்களால் பேசப்படுகிறது. இது அதியா, அதியன், யொருபா, யெரவா, பஞ்சிரி யெரவா, இரி ...

                                               

வடமேற்குக் கோலமி மொழி

வடமேற்குக் கோலமி மொழி கோலமி-நாய்க்கி பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேச, மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 50.000 மக்களால் பேசப்படுகிறது. கோலம ...

                                               

ஜென்னுக் குறும்பா மொழி

ஜென்னுக் குறும்பா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 35.000 பேர்களால் பேசப்படுகிறது. இது, ஜென் குறும்பா, தென் குறும்பா, ஜென்ன ...

                                               

ஷோலக மொழி

ஷோளக மொழி தமிழ் மற்றும் கன்னட மொழிகளுடன் தொடர்புடைய ஒரு திராவிட மொழி ஆகும். இதை ஷோளக மக்கள் பேசுகிறார்கள். இம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோரின் எண்ணிக்கை 24.000 ஆகும்.

                                               

ஹோலியா மொழி

ஹோலியா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், கர்நாடகம், மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி, 2002 இன் கணக்கெடுப்பின்படி ஏறத்தாள 500 மக்களால் பேசப்படுகிறது. இது ஹோலார், ...

                                               

ககவுசு மொழி

ககவுசு மொழி துருக்கிய மொழிகளில் ஒன்று. மல்டோவாவின் தெற்கு பகுதியில் ககவுசு தன்னாட்சி மண்டலத்தில் ஆட்சி மொழியாகும். இப்பகுதியை தவிர, உக்ரைன், துருக்கி, ரசியா ஆகிய நாடுகளில் ககவுசு மக்கள் வசிக்கும் இடங்களிலும் பேசப்படுகிறது. துருக்கி மொழிக் குடும்ப ...

                                               

துருக்கிய மொழி

துருக்கிய மொழி துருக்கியர்களின் தாய்மொழியாகும். இது இச்தான்புல் துருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. இது தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, காகஸஸ், மத்திய ஆசியா, ஐரோப்பாவின் பிற பகுதிகள், ஐரோப்பா ஐக்கிய நாடுகள், மசிடோனா, கிரீசு, துருக்கி, வடக்கு ச ...

                                               

அரவாக்கன் மொழிகள்

அரவாக்கன் மொழிகள் தென்னமெரிக்காவின் பண்டைத் தாயக மக்கள் மத்தியில் உருவான ஒரு மொழிக் குடும்பம். இவை மைப்பூரிய மொழிகள் எனவும் அறியப்படுகின்றன. இக்குடும்பத்தின் கிளைகள் நடு அமெரிக்கா, இன்றைய பகாமாசு உள்ளடங்கிய கரிபிய மற்றும் அத்திலாந்திக் பகுதிகளில் ...

                                               

எசுப்பானியம்

எசுப்பானிய மொழி அல்லது ஸ்பானிய மொழி அல்லது எசுப்பான்யால் மொழி ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும், தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் ...

                                               

தென் அமெரிக்க மொழிகள்

தென் அமெரிக்காவில் பேசப்படும் மொழிகளை மூன்று பரந்த குழுக்களில் அடக்கலாம்: குடிமைப்படுத்திய நாடுகளின் மொழிகள்; பல உண்ணாட்டு மொழிகள், ; மற்றும் சிறுசிறு பகுதிகளில் வந்தேறிகளால் பேசப்பட்டு பெரும்பான்மை மொழிகளின் தாக்கத்திலிருந்து தப்பிய பல்வேறு பிற ...

                                               

மைப்பூரே மொழி

மைப்பூரே மொழி முன்னர் வென்டுவாரி, சிப்பாப்போ, அவுட்டனா ஆற்றோரங்களில் பேசப்பட்ட மொழியாகும். அத்துடன் மேல் ஒரினோக்கோ பகுதியில் பொது மொழியாகவும் இது இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இது அழிந்துவிட்டது. சம்போனி என்பது இம்மொழியின் இலக்கண விபரம் ...

                                               

வராவோ மொழி

வராவோ மொழி வாராவோ மக்களால் பேசப்படுகின்ற மொழி. இம்மக்கள் வடக்கு வெனிசுவேலா, கயானா, சுரினாம் ஆகிய நாடுகளில் வாழுகின்றனர். 2007 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பின்படி வெனிசுவேலாவில் இம்மொழியைப் பேசும் 28.100 மக்கள் உள்ளனர். இவர்கள் வடகிழக்கு வெனிசுவேல ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →