Back

ⓘ சமூக அறிவியல்



                                               

எண்ணிம மனிதவியல்

எண்ணிம மனிதவியல் என்பது மனிதவியல், கணினியியல் துறைகள் இணைந்த ஒரு கல்விப் புலம் ஆகும். இத் துறை மரபுசார் சமூக அறிவியல் துறைகளை கணினியியல் கருவிகள், குறிப்பாக தகவல் அறிவியல் கருவிளைப் பயன்படுத்தி அணுகும் முறைமை ஆகும். எண்ணிமச் சேகரிப்புகளை தொகுப்பதிலிருந்து, பெரும் பண்பாட்டுத் தரவுகளை அகழ்வது வரை என இத் துறையின் அக்கறைகள் விரிவானது.

                                               

டாக்டர் என். ஜி. பி தொழில்நுட்ப நிறுவனம்

டாக்டர் என். ஜி. பி தொழில்நுட்ப நிறுவனம் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 2007 ஆம் ஆண்டு மருத்துவர் நல்ல ஜி. பழனிசுவாமி ஆவர்களால் தொடங்கப்பட்டு தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

                                               

பிரீதி பட்கர்

பிரீதி பட்கர் இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரும் மனித உரிமை ஆர்வலரும் ஆவார். கட்டாயப் பால்வினைத் தொழில் மற்றும் கடத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளில் முன்னோடிப் பணிகளைச் செய்துவரும் "பிரேரானா" என்ற அமைப்பின் இணை நிறுவனரும் இயக்குனரும் ஆவார்.

                                               

சுஜாதா சாகு

சுஜாதா சாகு ஒரு இந்தியச் சமூகத் தொழில்முனைவோர் ஆவார். ஆசிரியராக பணிபுரிந்த இவர், லடாக்கிலுள்ள தொலைதூர கிராமங்களில் பள்ளி நிலைமைகளை மேம்படுத்துவதற்காக "17000 அடி அறக்கட்டளை" என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார். இந்த அரசு சார்பற்ற அமைப்பு பள்ளிகளுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை வழங்கியும், தன்னார்வ ஆசிரியர்களை ஏற்பாடும் செய்துள்ளது. இவரது இந்தப் பணியை அங்கீகரிக்கும் விதமாக 2015இல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

                                               

அர்ச்சனா சோரெங்

அர்ச்சனா சோரெங் என்பார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசாவின் சுந்தர்கட் பகுதியினைச் சார்ந்த ராஜாங்புரின் பிகாபாந்த் கிராமத்தினைச் சார்ந்த காரிய பழங்குடியினைச் சார்ந்தவர்.இவர் காலநிலை மாற்றம் மற்றும் மரபுசார் அறிவினை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் பழங்குடி சமூகங்களின் பாரம்பரிய அறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகிறார். ஐ.நா. இளைஞர் வியூகத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் நிறுவிய காலநிலை மாற்றம் குறித்த இளைஞர் ஆலோசனைக் குழுவின் ஏழு உறுப்பினர்களில் ஒருவராக சோரெங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                                               

எம். என். சீனிவாஸ்

மைசூர் நரசிம்மச்சார் சீனிவாஸ் ஒரு இந்திய சமூகவியலாளரும், சமூக மானிடவியலளரும் ஆவார். சாதி மற்றும் சாதி அமைப்புகள், சமூக அடுக்குப்படுத்தல், சமசுகிருதமயமாக்கல் மற்றும் தென்னிந்தியாவில் மேற்கத்தியமாக்கல், ‘ஆதிக்க சாதி’ என்ற கருத்து எதிர்ப்பு ஆகியவற்றில் இவர் பெரும்பாலும் அறியப்பட்டவர்.

                                               

புதுவைக் கிருஷ்ணா

தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், புதுவைக் கிருஷ்ணா என்னும் புனைப் பெயரில் கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரை எனப் பல படைப்புகளைப் படைத்து வருபவர். தமிழகத்தின் அன்னை எனப் போற்றப்படும் சென்னையில் கே.கே. நகரில் பிறந்து வளர்ந்தவர். சென்னை, கோடம்பாக்கம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவர். தாத்தா கோவிந்தன் இராணுவப்பணியில் இருந்ததால் நாட்டுப்பற்றுடன் திகழ்ந்தார். மேனிலைக் கல்வி பயிலும் காலத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலரானார். சென்னை, கௌரிவாக்கத்திலுள்ள எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரியில் இளங்கலைப் படிப்பு பயிலும்பொழுது தேசிய மாணவர் ...

சமூக அறிவியல்
                                     

ⓘ சமூக அறிவியல்

சமூக அறிவியல் என்பது உலகின் மனித நடத்தைகள் பற்றிய கல்வியாகும்.

இதனுள் பின்வருவன அடங்குகின்றன.

 • மொழியியல் Linguistics
 • தொடர்பாடல் Communication
 • குற்றவியல் மற்றும் குற்ற நீதி இயல் Criminology and Crimnal Justice
 • பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் உதவி இயல் Victimology and Victim Assistance
 • சமூகவியல் Sociology
 • அரசியல் Political science
 • மானிடவியல் Anthropology
 • மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி Human Rights and Duties Education
 • கல்வி Education
 • புவியியல் Geography
 • வரலாறு History
 • பொருளியல் Economics
 • உளவியல் Psycology
Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →