Back

ⓘ திருநெல்வேலித் தமிழ்                                     

ⓘ திருநெல்வேலித் தமிழ்

திருநெல்வேலித் தமிழ் அல்லது நெல்லைத் தமிழ் என்பது தென்பாண்டிச் சீமை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும், பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்குத் தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழி, பொதிகை மலையில் பிறந்தது என இந்து புராணங்கள், இதிகாசங்களில் தகவல்கள் உள்ளன. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லைத் தமிழைத் தமிழ் மொழியின் துவக்கநிலை அமைப்பைக் கொண்டுள்ள தூய தமிழ் வடிவமாக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக சில வார்த்தைகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 • சொல்லுதான் - சொல்கிறான்
 • அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
 • நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
 • ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை! நீ எப்பொழுது வருகிறாய்?
 • முடுக்குது - நெருக்குகிறது
 • செய்தான் - செய்கிறான்
 • நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
                                     

1. நெல்லைத்தமிழ் சொற்கள்

 • செவி – காது
 • பைய – மெதுவாக
 • கோட்டி – மனநிலை சரியில்லாதவர்
 • சோலி – வேலை
 • கூவை – ஆந்தை an owl bird of bad omen
 • வளவு – முடுக்கு, சந்து
 • பொறத்தால – பின்னாலே
 • இடும்பு – திமிறு arrogance
 • கசம் – ஆழமான பகுதி
 • சவுட்டு – குறைந்த
 • சாவி – மணியில்லாத நெல், பதர்
 • மாப்பு – மன்னிப்பு
 • சீக்கு – நோய்
 • முகரை – முகம்
 • சாரம் – லுங்கி
 • சீனி – சர்க்கரை Sugar
 • கொட்டாரம் – அரண்மனை
 • வேக்காடு – வியர்வை
 • ராத்தல் – ஊர் சுத்துதல்
 • குறுக்கு – முதுகு
 • மக்கா – நண்பா
 • கொடை – திருவிழா
 • தொரவா – சாவி
 • பிளசர் – கார்
 • செய்தான் - செய்கிறான்
 • கிடா – பெரிய ஆடு male
 • முடுக்குது – நெருக்குகிறது
 • மூடு – மரத்து அடி
 • சேக்காளி – நண்பன்
 • சொல்லுதான் – சொல்கிறான்
 • மண்டை – தலை
 • ஆச்சி – வயதான பெண்மணி – Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள்.
 • செவிடு – கன்னம்
 • வெக்க – சூடு, அனல் காற்று
 • திட்டு – மேடு
 • ஒரு மரக்கா வெதப்பாடு – சுமார் 8 *செண்ட் நிலம்
 • ஆக்கங்கெட்டது – கெட்ட நேரம், சரியில்லாத ஆள் not constructive a bad omen
 • இங்கன – இங்கு
 • கொண்டி – தாழ்ப்பாள்
 • சங்கு – கழுத்து
 • பூடம் – பலி பீடம்
 • அண்ணாச்சி – பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
 • வாரியல் – துடைப்பம்
 • சிரை – தொந்தரவு
 • துஷ்டி – எழவு, சாவு, இறப்பு funeral
 • பைதா – சக்கரம் wheel; In maths English pie x Diameter is circumference!!)
 • ஏலலே – நண்பனை அழைப்பது
 • களவானி – திருட்டுப்பயல்
 • செத்த நேரம் – கொஞ்ச நேரம்
 • குறுக்க சாய்த்தல் – படுத்தல்
 • சிரிப்பாணி – சிரிப்பு
 • புரவாட்டி – அப்புறம்
 • அந்தானிக்கு – அப்பொழுது
 • நொம்பலம் -தள்ளவும், தள்ளலாம்
 • மச்சி – மாடி
 • பாட்டம் – குத்தகை
Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →