Back

ⓘ தமிழ் எண்கள்                                               

காற்றுக்கென்ன வேலி (தொலைக்காட்சித் தொடர்)

ராஜா பார்வை என்பது 18 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் காதல் நாடகத் தொடர் ஆகும். இது மொஹார் என்ற வங்காள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடர் தஞ்சை ஆர்.கே என்பவர் இயக்கத்தில் பிரியங்கா குமார் மற்றும் சூர்யா தர்ஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அபிஷேக் ரெகே என்பவர் எண்டெமால் ஷைன் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

                                               

ராஜா பார்வை (தொலைக்காட்சித் தொடர்)

ராஜா பார்வை என்பது 22 மார்ச்சு 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் காதல் நாடகத் தொடர் ஆகும். இது சஞ்சர் பாத்தி என்ற வங்காள மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடர் ரிஷி என்பவர் இயக்கத்தில் முன்னா ரஹ்மான் மற்றும் ரெஸ்மி ஜெயராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க கேத்ரின் சோபா என்பவர் ரேடேபைனிங் என்டேர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

                                               

திருவத்திபுரம்

திருவத்திபுரம் அல்லது செய்யார் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யார் வட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றியம், செய்யார் வருவாய் கோட்டம், செய்யார் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 27 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய இரண்டாம் நிலை நகராட்சியாகவும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். செய்யாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவத்திபுரம் நகரம் இங்கு அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் செய்யாறு ஆற்றின் மூலம் நன்கு அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் திருவத்திபுரம் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. திருவத்திபுரம் ...

தமிழ் எண்கள்
                                     

ⓘ தமிழ் எண்கள்

தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் கிரந்த எழுத்து முறை ஆகும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப்போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது பெருவழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்திய-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

                                     

1. எண் வடிவங்கள்

தமிழ் எண்களில் பழங்காலத்தில் சுழியம் பூஜ்யம் இல்லாமல் போயினும், தற்காலத்தில் சுழியம் தமிழில் எண்களை எழுதும் போது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1825ஆம் ஆண்டு வெளி வந்த கணித தீபிகை என்னும் நூல் கணித செயல்பாடுகளை எளிமையாக்கும் பொருட்டு தமிழில் சுழியம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது. ஒருங்குறியின் 4.1 பதிப்பில் இருந்து தமிழ் எண் சுழியம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

                                     

2. பயன்படுத்தும் முறை

தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் Positional System எழுதப் பயன்படுத்தப்படவில்லை. 10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் இருப்பதைக்கொண்டு இதை அறியலாம். தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே Abbreviational System பயன்படுத்தப்பட்டது. சுழியம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.

உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது.

அதாவது,

இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று ௨-௲-௪-௱-௫-௰-௩

தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது.

                                     

3. செந்தமிழ் எண்ணுச்சொற்களும் பிற திராவிட எண்ணுச்சொற்களும்

கீழுள்ள அட்டவணை முதன்மையான தென்னிந்திய/திராவிட மொழிகளை ஒப்பிடுகிறது. இங்கே சொல்வடிவம் என்று சொல்வது வாயாற்சொல்லி எழும் ஒலிநிலைச் சொல்வடிவத்தையே; தமிழ் வரிவடிவத்தைத் தொல்காப்பியத்தின்படி உச்சரித்தால்மட்டுமே இங்கே செந்தமிழ்பற்றிக்கூறுங் கூற்றுப் பொருந்தும் திராவிட மொழிகளில் மிகப் பழைய செவ்வியல் மொழியாகிய தமிழ் மொழியில் உள்ள எண்ணுச்சொற்கள் மற்ற திராவிட மொழிக்குடும்ப எண்ணுச்சொற்களைவிட மூலத்தொல் திராவிடச் சொல்லமைப்புக்களுக்கு நெருக்கமானவை. அதாவது மூலத்திராவிடத்திலிருந்து ஒரே எண்ணுச்சொற்களைப்பெற்றுப் படிப்படியே திராவிடமொழிகள் பிரிந்து அவற்றைப் படிப்படியே பேரளவில் சிதைத்துவிட்டன. ஆனால் செந்தமிழ் எண்ணுச்சொற்களின் பழைய வடிவத்தைப் பெரும்பாலும் சிதையாமற் போற்றியுள்ளது. ஐந்து ஆறு என்பவற்றிற்கானவைமட்டும் சொன்முதல் மெய்யொலியை இழந்துவிட்டன. இன்னொன்று கவநிக்கவேண்டுவதென்னவென்றால் தொல்காப்பியத்தின்படிச் செந்தமிழை உச்சரித்தால்மட்டுமே இந்தக் கூற்றுப் பொருந்தும்

மேலும் தமிழ், பல்லவ எழுத்து ஊடாகவும் அதில் இருந்துப் பின்னர் கவி எழுத்து ஊடாகவும் கேமர் எழுத்து ஊடாகவும் பிற தென்கிழக்கு ஆசிய எழுத்துகளூடாகவும் பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய வரைவன்களை/எண்குறிகளை வடிவமைத்துள்ளது.                                     

4. தமிழ் இலக்கம் - எண் எழுத்துக்கள்

தமிழ் இலக்கம் - எண் எழுத்துக்கள்

எண் ஒலிப்பு

 • ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
 • எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

மேலும் சில எண் குறிகள்

 • ௰௫ = 15
 • ௰௩ = 13
 • ௧ = 1
 • ௱௲௱௱௲ = 1.000.000.000.000 lakh crore
 • ௰௮ = 18
 • ௪ = 4
 • ௲௱௱௲ = 10.000.000.000 thousand crore
 • ௱௱௱௲ = 1.000.000.000 100 crore
 • ௨௱ = 200
 • ௩ = 3
 • ௯ = 9
 • ௱௲ = 100.000 lakh
 • ௰௲௱௱௲ = 100.000.000.000 10 thousand crore
 • ௱௫௰௬ = 156
 • ௰௱௱௲ = 100.000.000 10 crore
 • ௭௰௲ = 70.000
 • ௲௪௰ = 1040
 • ௰௨ = 12
 • ௰௬ = 16
 • ௯௰௱௲ = 9.000.000
 • ௲௧ = 1001
 • ௲ = 1000
 • ௱௱௲ = 10.000.000 crore
 • ௮ = 8
 • ௮௱௲ = 800.000
 • ௰௪ = 14
 • ௫ = 5
 • ௰௯ = 19
 • ௰௧ = 11
 • ௭ = 7
 • ௰௭ = 17
 • ௰௲ = 10.000
 • ௮௲ = 8000
 • ௱ = 100
 • ௨ = 2
 • ௰௱௲ = 1.000.000 10 lakhs
 • ௬ = 6
 • ௨௰ = 20
 • ௰ = 10
 • ௩௱ = 300
 • ௱௱௲௱௱௲ = 100.000.000.000.000 crore
 • ௯௰௲ = 90.000
                                     

5. மேலும் சில இறங்குமுக எண்கள்

 • 1/44706816000 – பாகம்
 • 1/74481555456000 – சிந்தை
 • 1/7451136000 – பந்தம்
 • 1/320 – முந்திரி
 • 1/64 – கால் வீசம்
 • 1/5320111104000 – நாகவிந்தம்
 • 1/80 – காணி
 • 1/10 – இருமா
 • 1/312947712000 – விந்தம்
 • 1 – ஒன்று
 • 1/2 – அரை
 • 1/20 – ஒருமா
 • 3/16 – மூன்று வீசம்
 • 1/32 – அரைவீசம்
 • 1/5 – நாலுமா
 • 1/16 – மாகாணிவீசம்
 • 1/23654400 – மும்மி
 • 3/64 – முக்கால்வீசம்
 • 5/8 - அரையரைக்கால் அரை + அரைக்கால்
 • 1/57511466188800000000 – நுண்மணல்
 • 3/80 – முக்காணி
 • 1/2323824530227200000000 – தேர்த்துகள்
 • 1/2150400 – இம்மி
 • 3/320 – அரைக்காணி முந்திரி
 • 1/165580800 – அணு –> ≈ 6.0393476E-9 –> ≈ nano = 0.000000001
 • 1/102400 – கீழ்முந்திரி
 • 1/9585244364800000 – குரல்வளைப்படி
 • 1/8 - அரைக்கால்
 • 1/4 – கால்
 • 3/4 – முக்கால்
 • 1/575114661888000000 – வெள்ளம்
 • 1/1490227200 – குணம்
 • 7/8 - முக்காலரைக்கால் முக்கால் அரைக்கால்
 • 1/8 – அரைக்கால்
 • 3/20 – மூன்றுமா
 • 1/160 – அரைக்காணி
 • 3/8 - காலரைக்கால் கால் + அரைக்கால்
 • 1/489631109120000 – கதிர்முனை
 • 1/40 – அரைமா
                                     

6. அளவைகள்

பொன்நிறுத்தல்

 • 4 கழஞ்சு – 1 கஃசு
 • 2 மஞ்சாடி – 1 பணவெடை
 • 4 கஃசு – 1 பலம்
 • 8 பணவெடை – 1 வராகனெடை
 • 5 பணவெடை – 1 கழஞ்சு
 • 2 குன்றிமணி – 1 மஞ்சாடி
 • 4 நெல் எடை – 1 குன்றிமணி

பண்டங்கள் நிறுத்தல்

 • 10 வராகனெடை – 1 பலம்
 • 32 குன்றிமணி – 1 வராகனெடை
 • 6 வீசை – 1 தூலாம்
 • 40 பலம் – 1 வீசை
 • 8 வீசை – 1 மணங்கு
 • 20 மணங்கு – 1 பாரம்

முகத்தல் அளவு

 • 2 உழக்கு – 1 உரி
 • 2 உரி – 1 படி
 • 8 படி – 1 மரக்கால்
 • 2 குறுணி – 1 பதக்கு
 • 5 செவிடு – 1 ஆழாக்கு
 • 2 பதக்கு – 1 தூணி
 • 2 ஆழாக்கு – 1 உழக்கு
                                     

6.1. அளவைகள் நீட்டலளவு

 • 12 விரல் – 1 சாண்
 • 10 நுண்ணணு – 1 அணு
 • 8 மயிர்நுணி – 1 நுண்மணல்
 • 8 கதிர்த்துகள் – 1 துசும்பு
 • 4 முழம் – 1 பாகம்
 • 2 சாண் – 1 முழம்
 • 8 நெல் – 1 விரல்
 • 6000 பாகம் – 1 காதம்1200 கெசம்
 • 8 துசும்பு – 1 மயிர்நுணி
 • 10 கோன் – 1 நுண்ணணு
 • 4 காதம் – 1 யோசனை
 • 8 அணு – 1 கதிர்த்துகள்
 • 8 நுண்மணல் – 1 சிறுகடுகு
 • 8 எள் – 1 நெல்
 • 8 சிறுகடுகு – 1 எள்
                                     

6.2. அளவைகள் பொன்நிறுத்தல்

 • 4 கழஞ்சு – 1 கஃசு
 • 2 மஞ்சாடி – 1 பணவெடை
 • 4 கஃசு – 1 பலம்
 • 8 பணவெடை – 1 வராகனெடை
 • 5 பணவெடை – 1 கழஞ்சு
 • 2 குன்றிமணி – 1 மஞ்சாடி
 • 4 நெல் எடை – 1 குன்றிமணி
                                     

6.3. அளவைகள் பண்டங்கள் நிறுத்தல்

 • 10 வராகனெடை – 1 பலம்
 • 32 குன்றிமணி – 1 வராகனெடை
 • 6 வீசை – 1 தூலாம்
 • 40 பலம் – 1 வீசை
 • 8 வீசை – 1 மணங்கு
 • 20 மணங்கு – 1 பாரம்
                                     

6.4. அளவைகள் முகத்தல் அளவு

 • 2 உழக்கு – 1 உரி
 • 2 உரி – 1 படி
 • 8 படி – 1 மரக்கால்
 • 2 குறுணி – 1 பதக்கு
 • 5 செவிடு – 1 ஆழாக்கு
 • 2 பதக்கு – 1 தூணி
 • 2 ஆழாக்கு – 1 உழக்கு
                                     

6.5. அளவைகள் பெய்தல் அளவு

 • 2 உரி – 1 படி
 • 2 ஆழாக்கு – 1 உழக்கு
 • 2 பதக்கு – 1 தூணி
 • 120 படி – 1 பொதி
 • 5 மரக்கால் – 1 பறை
 • 48 96 படி – 1 கலம்
 • 300 நெல் – 1 செவிடு
 • 2 குறுணி – 1 பதக்கு
 • 5 செவிடு – 1 ஆழாக்கு
 • 80 பறை – 1 கரிசை
 • 2 உழக்கு – 1 உரி
 • 8 படி – 1 மரக்கால்
                                     

7. ஆயிர அடுக்கு முறைமை

தமிழர் ஆயிர அடுக்கு முறைமையைப் பின்பற்றி எண்களுக்குப் பெயரிட்டு வழங்கிவந்தனர். எண் குறியீட்டில் 84.000.000 யோனி ஆண்டுகள் என்பதனைப் பெரியபுராணம் யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரத்து அதனுள் என்று குறிப்பிடுவது காண்க. இது ஆங்கில முறையில் 1.000.000.000.000 டிரிலியன், 1.000.000.000 பில்லியன் என எண்ணுவது போன்றதாகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →