Back

ⓘ கணிதம்                                               

கணிதம்

கணிதம் என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளைப் பிரதிபடுத்துகின்றன: பரவெளி space – வடிவவியல் அளவு quantity – எண்கணிதம் மாற்றம் change – பகுவியல் analysis – நுண்கணிதம் அமைப்பு structure – இயற்கணிதம் பல்வேறு கணிதவியலாளர்களுக்கும் இடையே கணிதத்தின் சரியான வீச்சையும் வரையறையையும் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. கணிதவியலாளர் தோரணங்களைத் தேடுகின்றனர்; கண்டுபிடித்த தோரணங்களைப் பயன்படுத ...

                                               

பயன்பாட்டுக் கணிதம்

கணித விதிகள், கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளை மற்ற துறை சார்ந்த சூழ்நிலைகளில் தீர்வு காணும் பொருட்டு பயன்படுத்தப் படுவதே பயன்பாட்டுக் கணிதம் எனப்படுகிறது. இது அறிவியல், பொறியியல், கணினி அறிவியல், வணிகம், தொழில் போன்ற துறைகளில் பயன்பாடுள்ள கணித மாதிரிகளைப் பற்றி விளக்கும் கணிதப் பிரிவாகும். தொழிற் கணிதம், புள்ளியியல், இயற்பியற் கணிதம், உயிரியற் கணிதம், பொருளியற் கணிதம், கணித மாதிரியியல், இரகசிய குறியீட்டியல் என பல துறைகளில் கணிதம் நேரடியாக பயன்படுகிறது.

                                               

இலக்கமியல் கணிதம்

கணிதவியல் பத்திரிகைக்கு, டிஸ்கிரீட் மேத்தமடிக்ஸ் இதழ் என்பதைக் காண்க. இலக்கமியல் கணிதம் என்பது அடிப்படையில் தொடர்ச்சியாக இல்லாமல் தனிநிலைப் பண்பு கொண்ட கணிதவியல் அமைப்புகளைப் பற்றிய படிப்பாகும். "மென்மையாக" மாறும் பண்புடைய மெய் எண்களுக்கு மாறாக, முழு எண்கள், வரைபடங்கள் மற்றும் தர்க்கத்திலான கூற்றுகள் போன்ற இலக்கமியல் கணிதத்தில் ஆய்வு செய்யப்படும் பொருள்கள் இவ்விதமாக மென்மையாக மாறாமல் தனித்துவமான தனித்தனி மதிப்புகளைக் கொண்டுள்ளன. ஆகவே இலக்கவியல் கணிதமானது "தொடர் கணிதத்திலிருந்து" நுண்கணிதம் மற்றும் பகுப்பாய்வு போன்ற தலைப்புகளை விலக்கியதாகிறது. இலக்கமியல் பொருள்கள் பெரும்பாலும் முழு எண்களால் ...

                                               

தமிழ்க் கணிதம்

தமிழ்ச் சூழலில் மரபில் தோன்றிய கணித கோட்பாடுகள், முறைவழிகள், குறியீடுகள், ஆக்கங்கள் ஆகியவற்றை தமிழக் கணிதம் எனலாம். தமிழ்க் கணிதம் இந்திய கணிதம் என்ற பொதுவின் கீழ் இன்றைய் உலகளாவிய கணிதத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. தமிழர்கள் கணிதத்துக்கு தொன்ம காலத்தில் இருந்து முக்கியத்துவம் தந்து அதை வளர்த்து வந்திருகின்றார்கள். "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் "எண் எழுத்து இகழேல்" - ஒளவையார் ஆகிய பழந்தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து தமிழர்கள் கணிதத்துக்கு தந்த முக்கியத்துவத்தை குறிக்கலாம்.

                                               

ஆட்களம் (கணிதம்)

கணிதத்தில் ஒரு செயலி அதன் தன்மை காரணமாக ஒரு வரையறை செய்யப்பட்ட சாரா மாறிகளையே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக f = 1 / x {\displaystyle f=1/x} என்ற செயலியை கருதுக. அச்செயலி பூச்சியம் தவிர்ந்த ஏனைய மெய்யெண்களில் எல்லாம் வரையறை செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு செயலிக்கும் அதன் சாரா மாறிகள் எடுக்கக்கூடிய பெறுமானங்களின் வரையறை அச்செயலியின் ஆட்களம் ஆகும்.

                                               

பகுவியல் (கணிதம்)

கணிதத்தை பரந்தவாரியாக இரண்டு பிரிவுகளாகப்பிரிக்கலாம். தனித்தனிச்செயல்முறைகள் கொண்டது ஒன்று. தொடர் செயல்முறைகள் கொண்டது மற்றொன்று. முதல் பிரிவில் இயற்கணிதம், நேரியல் இயற்கணிதம், எண் கோட்பாடு, சேர்வியல், முதலியவை அடங்கும். இரண்டாம் பிரிவில் பகுவியல், சார்புப்பகுவியல், இடவியல், முதலியவை அடங்கும். வடிவவியல் இவையிரண்டிலும் சேரும். இவைகளில் பகுவியல் என்ற உப இயல் நியூட்டன் தொடங்கிவைத்த நுண்கணிதக்கருத்துகளில் விதையிடப்பட்டு, 17, 18, 19 வது நூற்றாண்டுகளில் ஆய்லர், லாக்ரான்ஜி, கோஷி, வியர்ஸ்ட்ராஸ், காஸ், ரீமான், ஃபொரியர் இன்னும் பலருடைய ஆய்வுகளினால் பெரிய ஆலமரமாக வளர்ந்துவிட்ட ஒரு மிகச்சிறந்த பிரிவு. ...

                                               

கணிதவியலாளர்களின் தேசிய சங்கம்

கணிதவியலாளர்களின் தேசிய சங்கம் என்பது அமெரிக்காவில் உள்ள கணிதவியலாளர்களுக்கான தொழில்முறை சங்கமாகும். இச்சங்கத்தில் குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கம் 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →