Back

ⓘ கலைகள்                                               

கலைகள்

கற்றற்கு உரியவை எல்லாம் கலைகள். இது தமிழில் கலை என்பதற்கு தரப்படம் ஒரு பொது வரையறை. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொற்றாடலிலும் இப்பொருளே வழங்குவதே காணலாம். எனினும் "உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவிய முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்" என்று தமிழ் அறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.

                                               

தற்காப்புக் கலைகள்

தற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு. சில தற்கா ...

                                               

தமிழர் கலைகள்

சிலம்பம் தேவராட்டம் கோலாட்டம் தெருக்கூத்து மாடு ஆட்டம் கொல்லிக் கட்டை ஆட்டம் பறை ஆட்டம் உருமி ஆட்டம் உறியடி ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் குறவன் குறத்தி ஆட்டம் சேவையாட்டம் காவடியாட்டம் சிலம்பாட்டம் கும்மி பேயாட்டம் காளியாட்டம் ஆட்டங்கள் புலி ஆட்டம் சாமியாட்டம் ஒயிலாட்டம் தப்பாட்டம் வில்லுப்பாட்டு மயிலாட்டம் கைச்சிலம்பாட்டம் கரகாட்டம் பட்டிமன்றம் பாம்பாட்டம் அபிநயக் கூத்து நாட்டுக்கூத்து சாக்கம் கூத்துக்கள் சாந்திக் கூத்து மெய்க் கூத்து குரவைக் கூத்து நோக்கு பார்வைக் கூத்து சாமியாட்டம் அல்லது வெறியாட்டு கலிநடனம் என்னும் கழாய்க் கூத்து விநோதக் கூத்து பாய்ந்தாடும் கரணம் கரகம் என்னும் குடக் ...

                                               

கலை

கலை எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது". மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலைநுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் அரங்கேற்றல் கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும். பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை நுட்பமாகும். உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும். மிகப்பழமையான கலைகள் யாவும் காட்சிப்படங்களையோ, கா ...

                                               

ஆய கலைகள் அறுபத்து நான்கு

ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் இங்கு வாராதிடர். -கம்பர்

                                               

தமிழர் தற்காப்புக் கலைகள்

நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன அல்லது மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு அம்சமாக தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய சண்டை அல்லது தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை குறிக்கின்றன எனலாம்.

ஆர்ப்பாட்டக் கலை
                                               

ஆர்ப்பாட்டக் கலை

ஆர்ப்பாட்டக் கலை என்பது ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை புத்தாக்கச் சிந்தனையோடு நிகழ்த்துவது ஆகும். சமூகப் போராட்டங்களில் செயற்றிறனோடு செயற்படுகின்ற தனிநபர்களும், அமைப்புகளும், குழுக்களும் பரந்துபட்ட அளவில் தங்கள் புத்தாக்கப் படைப்புத் திறனை வெளிப்படுத்திக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்துவார்கள். பதாகைகள், சுவரொட்டிகள், சுவரோவியங்கள், பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தங்கள் செய்திகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள்.

                                               

உம்மதாட்டு

உம்மதாட்டு என்பது கருநாடகத்தின் கலைகளில் ஒன்று. இதை கொடவ இனத்துப் பெண்கள் நிகழ்த்துவர். இவர்கள் கருநாடகத்தின் குடகு பகுதியில் வாழ்கின்றனர். தங்களுடைய பாரம்பரிய ஆடைகளையும், நகைகளையும் அணிந்திருப்பர். மரத்தாலான விளக்குகளைச் சுற்றி, வட்டவடிவில் கூடி நின்று, ஆடுவர். வட்டத்தின் நடுவில், நீர்க் குடத்தை கையில் வைத்திருப்பாண் ஒரு பெண். நடுவில் நிற்கும் பெண், காவிரித்தாயைக் குறிக்கிறது. ஆடும்போது காவிரி வரலாற்றைப் பற்றிய பாடலைப் பாடுவர். பாடல் வரிகளுக்கு ஏற்ப தாளம், இசை வேறுபாடு இருக்கும்.

மரக்கறிச் செதுக்கல்
                                               

மரக்கறிச் செதுக்கல்

மரக்கறிச் செதுக்கலின் தோற்றம் பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மரக்கறிச் செதுக்கல் 700ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சுகோதையில் தோன்றியதாகப் பலரும் கருதுகின்றனர். அதே வேளை இன்னொரு சாரார் அது சீனாவின் ரங் பரம்பரை கி.மு 618-906 யினால் மற்றும் சங் பரம்பரைகி.மு 960-1279யினால் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →