Back

ⓘ தொழினுட்பம்                                               

தொழினுட்பம்

தொழில் நுட்பம் என்பது பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு. தொழினுட்பம் கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும். எனினும் ஒரு இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழினுட்பம் பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங ...

                                               

பிக்கோ தொழினுட்பம்

பிக்கோத்தொழினுட்பம் ஒரு மீட்டரில் ஒரு லட்சம் கோடியின் ஒரு மடங்கு அளவில் அணுவிடை மற்றும் அணுவுட்பகுதிகளையும் கட்டுப்படுத்துவதை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைய தொழினுட்பமாகும். நானோ தொழினுட்பம் போன்று இணைச்சொல்லாக அறிமுகம் செய்யப்பட்ட சொல்தான் என்றாலும் நானோ தொழினுட்பம் முழுமையாக செயல்வடிவம் பெற பிக்கோதொழில்நுட்பம் அவசியமாகிறது.நானோ தொழினுட்பம் முழு செயல் வடிவம் பெற அதாவது அணு ஆதிக்கம் செய்ய அணுவிலும் சிறிய பிக்கோ மீட்டர் அளவே உடைய மின்கூடுகளான ஆர்பிட்டால்களையும் அதன் அமைப்புகளில் ஏற்படும் அலை மற்றும் ஆற்றல் மாற்றஙளையும் பற்றிய அறிவு தேவை.

                                               

நெகிழித் தொழினுட்பம்

எளிதில் நெகிழக்கூடிய, உருவாக்க கூடிய பொருட்களான நெகிழி அல்லது பிளாத்திக்குப் பொருட்களின் வேதியியல் பண்புகளையும், அவை உற்பத்தி செய்யப்பட்ட கூடிய முறைகளையும் குழைவியல் தொழினுட்பம் அல்லது நெகிழித் தொழினுட்பம் விளக்குகின்றது.

                                               

நுண்ணிய தொழினுட்பம்

நுண்ணிய தொழினுட்பம் என்பது குறைந்த அளவாக ஒரு மைக்குரோமீட்டர் அளவுள்ள பருவளவு உடைய உருப்படிகளைப் படைக்கும் தொழினுட்பம். ஒரு மைக்குரோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒரு மில்லியனில் ஒரு பங்காகும். அதாவது 10 −6 மீட்டர் அல்லது 1μm அறிவியலாளர்களும் பொறியியலாளர்களும் ஏறத்தாழ 1970 களில் எவ்வாறு மிக மிக அதிகமான மிகநுண்ணிய திரிதடையம் என்னும் திரான்சிசிட்டர் கருவிகளை சிலிக்கான் போன்ற பொருளால் ஆன சிறு சில்லுகளில் ஒருசேர உருவாக்குவது அல்லது படைப்பது என்று கண்டு தேர்ச்சியடையந்தனர். இவற்றை மைக்குரோ சிப்பு அல்லது ஒருங்கிணைந்த சுற்றதர் என்றும் நுண்தொகுசுற்றுகள் microelectronic integrated circuits அழைத்தனர். ...

                                               

கோல்-கோடு தொழினுட்பம்

காற்பந்தாட்டத்தில், கோல்-கோடு தொழினுட்பம் எனப்படுவது கால்பந்து கோல்கோட்டை எப்போது முழுவதுமாகத் தாண்டியது என்பதை இலத்திரனியல் கருவிகளின் உதவியுடன் கண்டறியும் முறையாகும். இது ஆட்ட நடுவருக்கு ஆடும் அணி கோலிட்டது அல்லது கோல் இடவில்லை என அறிவிப்பதற்கு உதவி புரியும். இந்த தொழினுட்பத்தின் நோக்கம் ஆட்ட நடுவர்களின் பங்கைக் குறைப்பதில்லை; மாறாக அவர்கள் ஓர் முடிவிற்கு வரத் துணைபுரிவதாயிருக்கும். இந்தத் தொழினுட்பம் ஆட்டநடுவருக்கு பந்து முழுமையாக கோல் கோட்டை தாண்டியதா அல்லவா என்பதைக் தெளிவாக அறிவிக்கும். அதனைக் கொண்டு நடுவர் இறுதி முடிவை எடுப்பார். இங்கிலீஷ் பிரீமியர் லீக், 2010 உலகக்கோப்பை கால்பந்து ம ...

                                               

காரப்பாக்கம்

காரப்பாக்கம் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் அல்லது பழைய மகாபலிபுரம் சாலை என அறியப்படும் இராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ளது. சென்னைப் பெருநகரப் பகுதியில் அங்கமாயுள்ள இச்சிற்றூரில் அமைந்துள்ள பல தகவல் தொழினுட்பம் மற்றும் தகவல் தொழினுட்பம் சார் சேவை நிறுவனங்களால் இது பரவலாக அறியப்பட்டு வருகிறது. இச்சிற்றூரின் மக்கள்தொகை ஏறத்தாழ 4.500 ஆகும். இங்கு சத்யம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஆக்சன்ச்சர் இந்தியா, காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம், போட்டான் இன ...

கட்டற்ற ஆக்கமைப்பு
                                               

கட்டற்ற ஆக்கமைப்பு

கட்டற்ற ஆக்கமைப்பு பொருட்களுக்கான வடிவமைப்பை கட்டற்ற முறையில் ஆக்கி மனித பயன்பாட்டுற்கு அளிப்பதை குறிக்கும். தமிழில் இதை திறந்த ஆக்கமைப்பு அல்லது கட்டற்ற வடிவமைப்பு அல்லது கட்டற்ற பொருளமைப்பு என்றும் கூறலாம். கட்டற்ற மென்பொருள், கட்டற்ற விக்கிபீடியா ஆகியவற்றுக்கு பின் இருக்கும் தத்துவமே கட்டற்ற ஆக்கமைப்பு அல்லது கட்டற்ற பொருளமைப்பின் பின்பும் இருக்கின்றது. எனினும், கட்டற்ற பொருள் கட்டமைப்புக்கான அடித்தளம், வழிமுறைகள் இன்னும் மிகவும் ஆரம்ப நிலைகளிலேயே இருக்கின்றது.

காந்த மிதத்தல்
                                               

காந்த மிதத்தல்

காந்தத்தால் மிதத்தல் என்பது எந்த ஒரு பொருளின் உதவியும் இல்லாமல், ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும் என்ற காந்த சக்தியை மட்டும் கொண்டு ஒரு பொருள் மிதப்பதைக் குறிக்கின்றது. இந்த தொழில்நுட்பம் தற்போது தொடர்வண்டி வரையிலும் விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெக்சொப்
                                               

ரெக்சொப்

ரெக்சொப் என்பது ஒரு உறுப்பினர்களுக்குரிய ஒரு பட்டறை ஆகும். எல்லா திறன் நிலைகளிலும் இருக்கும் ஆர்வலர்களும் அவர்களின் செயற்றிட்டங்களை நிறைவேற்ற பல்வேறு தொழிற்துறை கருவிகளையும் சாதங்களையும் இங்கு பயன்படுத்தலாம். இங்கு இந்தக் கருவிகளைப் பயன்படுத்த தேவையான அடிப்படை பயிற்சியும் வழங்கப்படுகிறது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →