Back

ⓘ பண்பாடு



                                               

பண்பாடு

பண்பாடு, கலாச்சாரம் அல்லது கலாசாரம் என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும். பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளை ...

                                               

பரவலர் பண்பாடு

ஒரு சமூகத்தில் பரவலாக பலராலும் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு எனலாம். பரவலர் பண்பாட்டை பெருங்குடிப் பண்பாடு என்றும் குறிக்கலாம். அதாவது பெரும்பான்மைக் குடிமக்களின் பண்பாடு. மொழி, உணவு, உடை, விளையாட்டுகள், கொண்டாட்டங்கள், இசை என பல வழிகளில் இது வெளிப்பட்டு நிற்கும். பரவலர் பண்பாட்டை மேட்டுக்குடி பண்பாட்டோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தலாம்.

                                               

நூத்துபியப் பண்பாடு

நூத்துபியப் பண்பாடு தொல்லியல் மேடுகளின் அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உலகின் தொன்மையான நூத்துப்பிய பண்பாட்டின் அரை-நாடோடி மக்கள் சமயச் சடங்குகளின் போது படையலுக்குப் பயன்படுத்திய, 13.000 ஆண்டுகளுக்கு முந்தைய பீர் குடுவையை இஸ்ரேல் நாட்டின் கடற்கரை நகரமான ஹைபாவின் கார்மேல் மலையில் உள்ள ரக்கேபெட் குகையில் கண்டெடுக்கப்பட்து. பொதுவாக நூத்துப்பியப் பண்பாட்டு மக்கள் காட்டுத் தானியங்களையும், காட்டுச் சிறுமான்களையும் உணவாகக் கொண்டனர். தொல்லியல் அறிஞர் ஜி. கிறிஸ்டி டர்னரின் கூற்றுப்படி, லெவண்ட் பகுதியில் வாழும் தற்கால செமித்திய மொழிகள் பேசும் மக்களுக்கும், நூத்துப்பியப் பண்பாட்டு மக்கள ...

                                               

அசுன்னா பண்பாடு

அசுன்னா பண்பாடு தற்கால ஈராக் நாட்டின் வடக்கு மெசபடோமியா பகுதியில், புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகும். கிமு 6.000 காலத்திய அசுன்னா பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், கைக்கோடாரிகள், அரிவாள்கள், தானியங்களை அரைக்கும் கற்கள், சமையல் அடுப்புகள், சுடு களிமண் மற்றும் கல் தொட்டிகள், வேளாண்மை பயன்படுத்தப்பட்ட வீட்டு வளர்ப்பு விலங்குகளின் எலும்புகள் போன்ற தொல்பொருட்கள் வடக்கு மெசபடோமியாவில் அசுன்னா தொல்லியல் மேடு மற்றும் செம்சரா தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்யும் போது கிடைத்துள்ளது.

                                               

சமார்ரா பண்பாடு

சாமர்ரா பண்பாடு பண்டைய அண்மை கிழக்கின் நடு மெசொப்பொத்தேமியாவில் செப்புக் காலத்தில் கிமு 5500 முதல் கிமு 4800 வரை விளங்கிய தொல்பொருள் பண்பாடாகும். சமார்ரா பண்பாடு மட்பாண்ட புதிய கற்காலத்தியாகும் சாமர்ரா பண்பாட்டிற்கு முன்னர் மெசொப்பொத்தேமியாவில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் ஆ, ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு மற்றும் ஹலாப்-உபைதுகளின் இடைநிலைக் காலம் விளங்கியது. சாமர்ரா பண்பாட்டிற்குப் பின்னர் உபைதுகள் காலம் தொடங்கியது. சாமர்ரா பண்பாட்டின் முக்கியத் தொல்லியல் களங்கள் செம்சரா தொல்லியல் மேடு, எஸ்-சவ்வான் தொல்லியல் மேடு மற்றும் யாரிம் மலைக்குன்றாகும்.

                                               

ஹலாப் பண்பாடு

ஹலாப் பண்பாடு தொல்பழங்காலத்தில் பண்டைய அண்மை கிழக்கின் வடக்கு மெசொப்பொத்தேமியா பகுதிகளான தற்கால தென்கிழக்கு துருக்கி, சிரியா மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளில் கிமு 6100 - கிமு 5100-க்கும் இடைப்பட்ட காலத்தில் விளங்கிய பண்பாடாகும். வடக்கு சிரியாவில் உள்ள ஹலாப் தொல்லியல் மேட்டின் பெயரால் இப்பண்பாட்டை ஹலாப் பண்பாடு எனப்பெயரிடப்பட்டது. டெல் ஹலாப் தொல்லியல் களத்தை 1977 மற்றும் 1927களில் முதலில் அகழ்வாய்வு செய்தவர் மேக்ஸ் வான் ஓப்பன்யும் ஆவார். 1908ல் ஹலாப் பண்பாட்டின் தொல்பொருட்களை தென்கிழக்கு துருக்கியில் முதலில் கண்டறிந்தவர் ஜான் கார்ஸ்டாங் ஆவார். ஹலாப் பண்பாட்டின் முக்கியத் தொல்பொருட்கள், தற்கா ...

                                               

உட்பண்பாடு

சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளில் உட்பண்பாடு என்பது பெரிய பண்பாடு ஒன்றின் பகுதியாக உள்ள ஒரு குழு ஆகும். இக் குழுக்களின் பண்பாடு அவை சார்ந்த பெரிய பண்பாட்டில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய வகையில் இருக்கும்.

                                               

கூட்டுத்துவம்

மனிதர் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் போக்கையும் அனைவரின் கூட்டு ஒத்துழைப்பையும் முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதை கூட்டுத்துவம் குறிக்கின்றது. இது சமூக இலக்குகளை தனிமனித இலக்குகளை விட முக்கியம் என்கிறது. மேற்குநாடுகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தனிமனிதத்துவமே வளர்ச்சிக்கு முக்கியம் என கருதப்பட்ட போதிலும் கூடுத்துவதை முன்னிறுத்திய ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி அந்தக் கூற்றுடன் முரண்பட்டிருக்கிறது.

                                               

பங்களிப்புப் பண்பாடு

ஒரு படைப்பு பலரின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு, அவர்களாலேயே பயன்படுத்தப்படுதலை ஏதுவாக்கும் பண்பாடு பங்களிப்பாளர் அல்லது பங்களிப்புப் பண்பாடு எனப்படுகிறது. இது தொகையாக, தொழில் முறையில் உருவாக்கப்பட்ட, மக்களால் நுகர மட்டும் படும் படைப்புக்களை உருவாக்கும் நுகர்வோர் பண்பாட்டோடு ஒப்பிட்டு வேறுபடுத்தப்படுகிறது. எ.கா நாட்டார் பாடல்கள் பங்களிப்புப் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டு, திரையிசைப் பாடல்கள் நுகர்வோர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டு.

பண்பாட்டு மரபுவளம்
                                               

பண்பாட்டு மரபுவளம்

பண்பாட்டு மரபுவளங்கள் என்பவை, ஒரு குழு அல்லது சமூகம் அதன் முந்தைய தலைமுறைகளிடம் இருந்து மரபுரிமையாகப் பெற்று, அவற்றால் பயன்பெற்று, பேணி, விருத்தி செய்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் வளங்கள் ஆகும். இவை கட்டிடம், கருவிகள், சிற்பம் போன்ற இயல் வளங்களாகவோ, நாட்டுப்புறப் பாடல், பழமொழிகள், தொழிற்கலைகள் போன்ற புலப்படா வளங்கள் மற்றும் பண்புகளாகவோ, பண்பாட்டு முக்கியத்துவம் பெற்ற இயற்கை வளங்களாகவோ அமையலாம். இந்தப் பண்பாட்டு மரபுவளங்களைப் பாதுகாப்பது பண்பாட்டு நிறுவனங்களின் இலக்கு ஆகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →