Back

ⓘ நாடுகள்                                               

நாடு

அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் மற்றும் அரசு என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

                                               

ஐக்கிய நாடுகள் அவை

ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் ...

                                               

இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்

இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள் அல்லது நேச நாடுகள் என்பவை இரண்டாம் உலகப் போரின் போது அச்சு அணி நாடுகளை எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும்.

                                               

மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்

மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள் என்பது பசிபிக் பெருங்கடலில் பப்புவா நியூகினிக்குத் வடகிழக்கே அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இங்கு மொத்தம் 607 தீவுகள் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் சுயாதீன அநுசரணையுடனான தன்னாட்சி அதிகாரமுடைய ஒரு நாடாகும். முன்னர் இந்நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் நேரடி ஆட்சியின் கீழ் ஐநாவின் கண்காணிப்பில் இருந்தன. 1979இல் இவை தமது அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்து பின்னர் 1986இல் விடுதலை பெற்றன. தற்போது இந்நாடு மிகப்பெருமளவில் வேலையில்லாப் பிரச்சினை, அளவுக்கதிகமான மீன்பிடித்தல், அமெரிக்காவின் அதிக நிதி உதவி போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றது. மைக்ரோனீசியக் கூட்டு ...

                                               

அச்சு நாடுகள்

அச்சு அணி நாடுகள் என்பவை இரண்டாம் உலகப் போரின் போது நட்பு அணி நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தன. ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில நாடுகள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன.

                                               

ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்

தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையில் 193 மேலே குறிப்பிடப்பட்ட உறுப்பு நாடுகளுக்கு மேலதிகமாக, ஒரு உறுப்பினரல்லாத, அவதானி நாடு ஒன்றும் உள்ளது. இந்நாடு வத்திக்கான் நகர நாடு ஆகும். இது நிரந்தரமான, அவதானிப்புத் தூதுக்குழுவொன்றை ஐநா தலைமையகத்தில் வைத்துள்ளது. சில அனைத்துலக நிறுவனங்களும் இவ்வாறான அவதானிகள் நிலையில் உள்ளன. இவற்றின் பட்டியலுக்கு ஐநா பொதுச்சபையைப் பார்க்கவும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →